புதன்கிழமை, ஜனவரி 15, 2025

டிஆர்பி-யில் டாப் 5-லிருந்து தூக்கி எறியப்பட்ட விஜய் டிவி சீரியல்கள்.. மாஸ் காட்டும் சன் டிவி சீரியல்கள்!

ஒவ்வொரு வாரமும் சின்னத்திரை ரசிகர்கள் எந்த சீரியலை ஆர்வத்துடன் தவறாமல் பார்க்கிறார்கள் என்பதை அந்த வாரம் வெளியாகும் டிஆர்பி ரேட்டிங்கை வைத்து தெரிந்துகொள்ளலாம். அந்தவகையில் இந்த வாரம் ஒளிபரப்பான சீரியல்களின் சன் மற்றும் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங் தற்போது வெளியாகி இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.

இதில் டாப் 5 இடங்களை சன் டிவி சீரியல்களே ஆக்கிரமித்து மற்ற எந்த சேனல்களின் சீரியல்களையும் உள்ளே விடாமல் மாஸ் காட்டியிருக்கிறது. அதிலும் சன் டிவியின் கயல் சீரியல் தொடர்ந்து டிஆர்பி-யில் முதலிடத்தைப் பிடித்து ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல் இதுதான் என கண்டித்துள்ளது. இதைத்தொடர்ந்து இரண்டாமிடம் அண்ணன் தந்தையின் பாசத்தை அழகாக வெளிப்படுத்தும் வானத்தைப்போல சீரியலுக்கு கிடைத்திருக்கிறது.

3-வது இடம் சன் டிவியின் கண்ணான கண்ணே சீரியலுக்கும், 4-வது இடம் இரண்டு தாரத்தை ஒரே டிராக்கில் ஓடிக் கொண்டிருக்கும் சுந்தரி சீரியலுக்கும் கிடைத்திருக்கிறது. 5-வது இடம் காதல்-ஆக்ஷன் கலந்த சன் டிவியின் ரோஜா சீரியல் பெற்றுள்ளது. இவ்வாறு டிஆர்பி தொடர்ந்து 5 இடங்களை சன் டிவி சீரியல்கள் பெற்றிருக்கும் நிலையில் இதில் ஏதாவது இரண்டு இடத்தை வழக்கமாக பெறும் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி, பாரதிகண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற சீரியல்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

இதனால் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் 6-ம் இடத்தைப் பிடித்திருக்கிறது. கடந்த வாரம் இந்த சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்த அத்தனை விஷயமும் சீரியலில் அரங்கேறி டிஆர்பி முன்னிலை வகித்த நிலையில், இந்த வாரம் பின்தங்கியுள்ளது.

இதைத்தொடர்ந்து 7-வது இடம் பாரதிகண்ணம்மா சீரியலுக்கு கிடைத்திருக்கிறது. இந்த சீரியலில் கடந்த சில நாட்களாகவே விறுவிறுப்பு குறைந்த டல் அடிக்கிறது. கடந்த வாரம் டாப் ஐந்து இடத்தில் இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இந்த வாரம் 8-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த சீரியலில் இந்த வாரம் முழுவதும் மூர்த்திக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு அதன் பிறகு அதை சுற்றியே கதை களம் இருப்பதால் ரசிகர்களுக்கு போரடித்து விட்டது.

9-வது இடம் மீண்டும் சன் டிவியின் புத்தம்புது சீரியல் ஆன எதிர்நீச்சல் சீரியலுக்கு கிடைத்திருக்கிறது. 10-வது இடம் விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியல் பெற்றிருக்கிறது. இவ்வாறு இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் யாரும் எதிர்பாராத அளவுக்கு சன்டிவியின் ஆதிக்கமே அதிகமாக இருப்பதால் அடுத்தடுத்த வாரங்களில் விஜய் டிவி ஒளிபரப்பாகும் சீரியல்களின் கதைக்களத்தை மாற்றிக் கூறுதல் விருப்பை ஏற்படுத்த முயற்சிப்பார்கள். இருப்பினும் அவர்களது முயற்சி செல்லுபடியாகுமா என அடுத்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கை பார்த்தால் தெரிந்துவிடும்.

Trending News