சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

சுட சுட வெளியான இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட்.. சின்னத்திரையை கலக்கும் டாப் 6 சீரியல்கள்

TRP Ratings List: ஒவ்வொரு வாரத்தின் இறுதி நாட்களிலும் அந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் வெளியாகுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் இருக்கும் டாப் சீரியல்களை பற்றிய தகவல் சுடச்சுட வெளிவந்துள்ளது.

இதில் 10-வது இடத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலும், 9-வது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியலும், 8-வது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக புத்தம் புது சீரியலான சிறகடிக்க ஆசை என்ற சீரியல் தற்சமயம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்று டாப் லிஸ்டில் 7-வது இடத்தை பிடித்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக 6-வது இடம் சன் டிவியில் ஒளிபரப்பாகும் Mr. மனைவி சீரியலுக்கு கிடைத்துள்ளது. 5-வது இடம் இனியா சீரியல் பெற்றுள்ளது. 4-வது இடம் வானத்தைப்போல சீரியல் பெற்றிருக்கிறது. இந்த சீரியலில் காட்டுமிராண்டிகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் ராஜபாண்டி மற்றும் அவருடைய அப்பா என இருவருமே சேர்ந்து கொண்டு ஓவர் ஆட்டம் போட்டு வருகின்றனர்.

Also Read: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ல் ஏற்பட்ட சிக்கல்.. விஜய் டிவியின் பாலிடிக்ஸ், ஒத்து ஊதும் இரண்டு பிரபலங்கள்

அதிலும் எப்படியாவது துளசியை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த சீரியலின் கதைகளமானது அமைந்துள்ளது. ஆனால் ரசிகர்களின் விருப்பமானது துளசியும் ராஜபாண்டியும் ஒன்று சேர வேண்டும் என்பதுதான். அது எப்பொழுது நடக்கும் என்பதை மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தொடர்ச்சியாக 3-வது இடம் சுந்தரி சீரியலுக்கு கிடைத்துள்ளது. இந்த சீரியலில் எப்படியோ கலெக்டர் கான்செப்ட்டை ஒரு வழியாக கொண்டு வந்து விட்டனர். தற்பொழுது மாசாக இறங்கி இருக்கும் கலெக்டர் சுந்தரியின் ஆட்டத்தை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் இருக்கின்றனர். இந்த சீரியலில் நடந்திருக்கும் இந்த புது மாற்றம் ரசிகர்களுக்கு கூடுதல் சுவாரசியத்தை அளித்துள்ளது.

Also Read: சொத்தும், பொண்டாட்டியும் இல்லாமல் நடுத்தெருவில் திண்டாட போகும் குணசேகரன்.. எல்லாத்துக்கும் ஆப்பு வைத்த ஜீவானந்தம்

மேலும் 2-வது இடம் கயல் சீரியல் பெற்றுள்ளது. இந்த சீரியலில் சமுதாயத்தில் ஒரு பெண்ணாக இருந்து தனக்கு வரக்கூடிய அனைத்து பிரச்சனைகளையும் கயல் எவ்வாறு திறம்பட கையாள்வதை காட்டிக் கொண்டிருப்பதால் பலருக்கும் இஷ்டமான சீரியலாக மாறிவிட்டது. அதிலும் இந்த சீரியலில் பிரச்சனைகளுக்கு பஞ்சம் இல்லாமல் அடி மேல் அடி வாங்கிக் கொண்டிருக்கும் கயல் இவற்றையெல்லாம் எப்படி சமாளிக்க போகிறார் என்பதை அனுதினமும் விறுவிறுப்புடன் காட்டுகின்றனர்.

முதல் இடம் எதிர்நீச்சல் சீரியலுக்கு கிடைத்துள்ளது. இந்த சீரியலில் குணசேகரனின் அக்கிரமங்களுக்கு முடிவு கட்டும் வகையில் நாலா பக்கமும் கர்மா சுத்தி அடித்துக் கொண்டிருக்கிறது. அதிலும் குணசேகரனின் குடும்பத்தில் உள்ள பெண்கள் மூலமாகவே இவை அனைத்தும் நிகழும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதிலும் இந்த யுத்த போரில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்பதற்கான விறுவிறுப்பும் சுவாரசியமும் குறையாமல் அனுதினமும் ஒளிபரப்பாகுவதால் தான் ரசிகர்களின் இஷ்டமான சீரியலாக மாறி இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் முதலிடத்தை பெற்றுள்ளது.

Also Read: குணசேகரனை புரட்டி எடுக்க பக்கா பிளான் போடும் ஜீவானந்தம்.. தம்பியை கைகழுவி விட்ட பரிதாபம்

Trending News