சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

இந்த வார டிஆர்பி-யில் அடிச்சு நொறுக்கும் டாப் 6 சீரியல்கள் எது தெரியுமா? வந்த வேலைய சிறப்பா செய்துவிட்ட எதிர்நீச்சல் கிடாரி

TRP Ratings Of Tamil Serials: சின்னத்திரை ரசிகர்களை குஷிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே வித்தியாச வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட சீரியல்களை பிரபல சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்பு செய்கிறது. அதிலும் ஒவ்வொரு வாரமும் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற மூன்று சேனல்களுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவும். ஆனால் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் மற்ற எந்த சேனல்களின் சீரியல்களையும் உள்ளே விடாமல் சன் டிவி சீரியல்கள் தான் டாப் 6 இடத்தை ஆக்கிரமித்து மாஸ் காட்டியுள்ளது.

அதிலும் பல மாதங்களாக டிஆர்பி-யில் முதல் இடத்தை தக்க வைத்த எதிர்நீச்சல் அநியாயத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் 10-வது இடத்தில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலும், 9-வது இடத்தில் சன் டிவியின் ஆனந்த ராகம் சீரியலும், 8-வது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியலும், எதிர்நீச்சல் இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக 6-வது இடத்தில் சன் டிவியின் இனியா சீரியல் உள்ளது. அன்பான கணவராக இவ்வளவு நாள் இருந்த விக்ரம் தலையில் அடிபட்டு மறுபடியும் இனியாவை டார்ச்சல் செய்யக்கூடிய ரகடு பாயாக மாறியது சீரியலை மேலும் விறுவிறுப்பாகி உள்ளது. இதன் தொடர்ச்சியாக 5-வது இடம் எதிர்நீச்சல் சீரியலுக்கு கிடைத்திருக்கிறது.

இதில் ஆதி குணசேகரனாக தன்னுடைய இயல்பான நக்கல் நையாண்டியுடன் நடித்துக் கொண்டிருந்த மாரிமுத்து மறைந்த பிறகு அவருக்கு பதில் கிடாரி புகழ் வேல ராமமூர்த்தி நடித்தார். ஆனால் இவரால் மாரிமுத்து அளவிற்கு ஆதி குணசேகரன் கேரக்டரில் சிறப்பாக நடிக்க முடியவில்லை. இதனாலேயே இந்த சீரியலை பார்ப்போரின் எண்ணிக்கை குறைந்து டிஆர்பி-யில் பின்னுக்கு தள்ளப்பட்டு 5வது இடத்தை பிடித்திருக்கிறது.

எப்படியோ வந்த வேலையை சிறப்பா செஞ்சிட்டிங்க! என்று நக்கலாக சோசியல் மீடியாவில் எதிர்நீச்சல் ரசிகர்கள் வேலராமமூர்த்தி வறுத்தெடுக்கின்றனர். 4-வது இடம் சிங்கப் பெண்ணே சீரியலுக்கு கிடைத்திருக்கிறது. கடந்த மாதம் துவங்கப்பட்ட புத்தம்புது சீரியலான சிங்கப் பெண்ணே சீரியலுக்கு ரசிகர்களின் மத்தியில் வெகு சீக்கிரமே அமோக வரவேற்பு கிடைத்துவிட்டது. கதாநாயகியான ஆனந்தி சில்வண்டு போல் இருந்து சிங்கம் போல் கர்ஜித்து கொண்டிருக்கிறார்.

3-வது இடம் கலெக்டராக ரவுண்ட் கட்டிக் கொண்டிருக்கும் சுந்தரிக்கு கிடைத்திருக்கிறது. 2-வது இடம் கயல் சீரியல் பெற்றுள்ளது. இதில் கதாநாயகி கயல் குடும்ப பாரத்தை மொத்தமாக தனது தலையில் சுமந்து கொண்டு போராடுவது பலருக்கும் உந்துதலாக இருக்கிறது. இதனால் இல்லத்தரசிகளின் இஷ்டமான சீரியல் ஆகவே இது மாறிவிட்டது.

முதல் இடம் வானத்தைப் போல சீரியல் பெற்றுள்ளது. இதில் அண்ணன் தங்கையின் பாச போராட்டத்தை அழகாக காண்பிக்கின்றனர். ‘இப்படி ஒரு அண்ணன் கிடைச்சா எப்படி இருக்கும்!’ என்றும் ‘இப்படி ஒரு தங்கை எனக்கு கிடைக்காம போச்சே!’ என்று பலரும் பொறாமைப்படும் வகையில் இந்த இரண்டு கதாபாத்திரங்களையும் சிறப்பாக சித்தரித்திருக்கின்றனர். அதிலும் தன்னுடைய தங்கையை அவருடைய கணவருடன் சேர்த்து வைப்பதற்காக அண்ணன் ஒவ்வொரு நாளும் போராடிக் கொண்டிருப்பது பார்ப்போரைக் கலங்க வைக்கிறது.

Trending News