ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

டிஆர்பி-யில் தெறிக்கவிட்ட சன் டிவி.. விஜய் டிவியின் பிரம்மாஸ்திரத்தையே ஆட்டம் காண செய்த ரியாலிட்டி ஷோ

சின்னத்திரை ரசிகர்கள் கடந்த வாரம் எந்த நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பார்த்து இருக்கிறார்கள் என்பதை அந்த வாரத்திற்கு உரிய டிஆர்பி ரேட்டிங்கை வைத்து தெரிந்துகொள்ளலாம். அந்த வகையில் கடந்த வார விஜய் டிவி மற்றும் சன் டிவி டிஆர்பி ரேட்டிங் தற்போது இணையத்தில் வெளியாகி கலக்கிக் கொண்டிருக்கிறது.

இதில் விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவான ஸ்டார்ட் மியூசிக் சீசன்3 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகி, அந்த நிகழ்ச்சியில் வெற்றியாளர் யார் என்பது தெரிய வந்தது. இதைத் தெரிந்து கொள்ள ரசிகர்களும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

இதில் ராஜா ராணி2 சீரியல் குழுவினர் 3 லட்சம் பரிசுத் தொகையுடன் ஸ்டார் மியூசிக் சீசன்3 டைட்டில் வின்னர் தேர்வு செய்யப்பட்டார்கள். இதைத் தொடர்ந்து மாற்றி யோசி ரியாலிட்டி ஷோ இரண்டாவது இடமும், குக் வித் கோமாளி சீசன்3 நிகழ்ச்சி மூன்றாம் இடமும் பெற்றிருக்கிறது.

இதைத் தொடர்ந்து 6 மணி செய்தி 4-ஆம் இடமும், வெற்றி நடை போடும் மதியமே என்ற புத்தம் புதிய ஷோ 5-ஆம் இடத்தையும், ஆறாமிடம் சூப்பர் சிங்கருக்கும், 7-மிடம் கலக்கப்போவது யாரு என்று நிகழ்ச்சிக்கும், எட்டாமிடம் நீயா நானா-விற்கும் கிடைத்திருக்கிறது.

இதே போன்றே சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் என்ற சீரியல் கடந்த சில மாதங்களாகவே முதலிடத்தை பிடித்து தன்னுடைய இருப்பை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து சுந்தரி இரண்டாமிடத்தையும், அண்ணன் தங்கச்சி பாச கதையை வெளிப்படுத்தும் வானத்தைப்போல சீரியல் மூன்றாம் இடத்தையும் பெற்றிருக்கிறது.

அதேபோல் ஆக்ஷன் காதல் நிறைந்த ரோஜா 4-ம் இடத்தையும், கண்ணான கண்ணே சீரியல் 5-ம் இடத்தையும் பெற்றிருக்கிறது. மேலும் ஆறாமிடம் புத்தம் புதிதாக துவங்கப்பட்ட இருக்கும் எதிர்நீச்சலுக்கும், நம்மையெல்லாம் குழந்தை பருவத்திற்கு அழைத்துச் செல்லும் அபியும் நானும் சீரியல் 7-ஆம் இடத்தையும் பெற்றிருக்கிறது.

மேலும் எட்டாமிடம் அன்பே வா-விற்கும், 9-வது இடம் சந்திரலேக்கா-விற்கும், பத்தாமிடம் அருவி சீரியலுக்கும், கிடைத்திருக்கிறது. இதைத்தொடர்ந்து பாண்டவர் இல்லம், தாலாட்டு, சித்தி 2, திருமகள், மகராசி, பூவேஉனக்காக போன்ற சீரியல்கள் அடுத்தடுத்த இடத்தைப் பெற்றிருக்கிறது.

Trending News