வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

டிஆர்பி-யில் பட்டைய கிளப்பும் டாப் 6 சீரியல்கள்.. மீண்டும் சன், விஜய் டிவியுடன் ரேஸில் இணைந்த ஜீ தமிழ்

This week’s Top 6 TRP rating list: சின்னத்திரை ரசிகர்களுக்கு இஷ்டமான சீரியல் எது என்பதை, அந்த வார டிஆர்பி-யில் தெரிந்துவிடும். அந்த வகையில் இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் 10-வது இடத்தில் ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியல் பிடித்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே ஜீ தமிழ் சீரியல்கள் எதுவுமே டாப் லிஸ்டில் இடம்பெறாமல் பின்னுக்கு தள்ளப்பட்டது.

இந்த நிலையில் சன் டிவியின் ஆனந்த ராகம் சீரியலை ஓரங்கட்டி விட்டு, 10-வது இடத்திற்கு கார்த்திகை தீபம் சீரியல் முன்னேறி இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக 9-வது இடம் விஜய் டிவியின் ஆஹா கல்யாணம் சீரியலுக்கும், 8-வது இடம் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மற்றும் பாக்கியலட்சுமி சீரியலின் மகா சங்கமத்திற்கும் கிடைத்துள்ளது.

7-வது இடத்தில் சன் டிவியின் இனியா சீரியல் உள்ளது. 6-வது இடத்தில் ரொமான்டி ஜோடியாக மாறிய முத்து- மீனாவின் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு கிடைத்திருக்கிறது. 5-வது இடம் கலெக்டராக மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் சுந்தரிக்கும், 4-வது இடம் எதிர்நீச்சலுக்கும் கிடைத்துள்ளது.

Also Read: கோர்ட்டுக்கு வந்து ஆஜராகிய தர்ஷினி.. எல்லாத்துக்கும் காரணம் இந்த குணசேகரன், நிரூபிக்க போகும் தோழர்

டிஆர்பி-யில் டாப் இடத்தைப் பிடித்த சீரியல்களின் லிஸ்ட்

மேலும் 3-வது இடம் அண்ணன் தங்கையின் பாச போராட்டத்தை தத்ரூபமாக காண்பிக்கும் வானத்தைப்போல சீரியலுக்கும், 2-வது இடம் சன் டிவியின் கயல் சீரியலுக்கும் கிடைத்துள்ளது. முதல் இடத்தை சமீபத்தில் துவங்கப்பட்ட சிங்கப்பெண்ணே சீரியல்தான் பிடித்துள்ளது.

இந்த சீரியலில் ஒவ்வொரு நாளும் சுவாரசியத்திற்கு பஞ்சமே இல்லாமல் விறுவிறுப்பாக செல்வதால், சிங்கப்பெண்ணே சீரியலை சின்னத்திரை ரசிகர்கள் ஒரு நாள் கூட பார்க்க தவறுவதில்லை. இதனால் தான் மற்ற சீரியல்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு சிங்கப்பெண்ணே சீரியல் டிஆர்பி-யில் முதலிடத்தை பிடித்து பட்டையை கிளப்பி உள்ளது.

Also Read: குசும்புக்கார முத்து கொஞ்சம் ஓவராகத்தான் போறாரு.. கிடைக்கிற கேப்பில் எல்லாம் ரோகிணியை பந்தாடும் விஜயா

Trending News