ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

இந்திய அணியில் மிரட்டும் 360 டிகிரி வீரர்கள்.. ஏபி டிவில்லியர்ஸ்க்கு சவால் விடும் மும்மூர்த்திகள்

இந்திய அணி தற்போது அனைத்து விதமான பார்மட்களிலும் கலக்கி வருகிறது. குறிப்பாக 20 ஓவர், 50 ஓவர் என எல்லா முதல்தர போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்தியாவிற்கு கோப்பையை பெற்று தரும் வகையில் இளம் படையினர் மிரட்டி வருகின்றனர்.

இப்பொழுது எல்லா வீரர்களும் சிறப்பாக விளையாடுகின்றனர், யாரை இந்திய அணிக்குள் வைத்திருப்பது என்பது கூட ஒரு பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. இந்திய அணியில் விக்கெட் கீப்பர்கள் என்று பார்த்தாலே ஐந்து பேர் இருக்கிறார்கள். இன்னும் ஓரிரு மாதங்களில், தொடங்குவதற்கும் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கு இளம் வீரர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்..

மூன்று வீரர்கள் இப்பொழுது இந்திய அணிக்கு சிறப்பான பங்களிப்பை தருகின்றனர். தென்னாப்பிரிக்காவின் நம்பிக்கை நட்சத்திரமான ஏபி டிவில்லியர்ஸ்சை போல இந்திய அணியில் தற்போது மூன்று 360 டிகிரி வீரர்கள் எதிரணியினரை அச்சுறுத்தி வருகின்றனர்

சூரியகுமார் யாதவ்: சமீப காலமாக இந்திய அணிக்கு பல போட்டிகளை வென்று கொடுக்கும் வகையில் இவரது ஆட்டம் இருக்கிறது. இவர் எல்லா பக்கமும் பந்தை அடிப்பதில் வல்லவர். இவர் ஆட்டத்தை பார்ப்பதற்கு என்றே ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

ரிஷப் பண்ட்: சொல்லவே வேண்டாம் முதல் பந்தில் இருந்து அதிரடி ஆட்டம் ஆடக் கூடியவர் இவர். இவரை பொறுமையாக ஆடச் சொல்லி இந்திய அணியில் சீனியர் வீரர்கள் வற்புறுத்துகின்றனர். ஓரிரு ஆட்டங்களில் சொதப்பினாலும், இவர் 360 டிகிரியில் விளையாடக்கூடிய வீரர்.

ஸ்ரேயாஸ் அய்யர்: மிடில் ஆர்டர் வீரராக அசத்தி வருகிறார் அய்யர். அனைத்து விதமான போட்டிகளிலும் இந்திய அணியில் விளையாடி வருகிறார். இவரும் நாலாபக்கமும் பந்தை விரட்டுவதில் சூரப்புலி தான்.

Trending News