புதன்கிழமை, ஜனவரி 15, 2025

விஜய்யுடன் நடிக்க மறுத்த 3 ஹீரோக்கள்.. உண்மையை போட்டு உடைத்த எதிர்நீச்சல் குணசேகரன்

Actor Vijay: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர் டிஆர்பியில் முதல் இடத்தை வகித்து வருகிறது. இதற்கு காரணம் இந்த தொடரின் திரைக்கதை என்றாலும் இதில் வில்லனாக நடிக்கும் குணசேகரனுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் ஆரம்பத்தில் சினிமாவில் இயக்குனர், நடிகர் என பல பரிமாணங்களை கொண்டு இருந்தாலும் அவருக்கு பெயரை வாங்கித் தந்தது எதிர்நீச்சல் தொடர் தான்.

இவருக்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து யூடியூப் சேனல்கள் குணசேகரனை பேட்டி எடுத்து வருகிறார்கள். இவரின் நிஜ பெயர் மாரிமுத்து. இவர் ஆரம்ப காலங்களில் இருந்தே சினிமாவில் ரசிகர்களுக்கு தெரியாத பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் விஜய் உடன் மூன்று ஹீரோக்கள் நடிக்க மறுத்த விஷயத்தை கூறியிருக்கிறார்.

Also Read : எதிர்நீச்சல் டிஆர்பியை காலி பண்ண வரும் சூப்பர் ஹிட் சீரியல்.. சிஷ்யனுக்கு குருவே வைக்க போகும் ஆப்பு

அதாவது இப்போது விஜய் பெரிய நடிகராக இருக்கும் பட்சத்தில் எல்லோரும் அவருடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறார்கள். ஆனால் அந்த காலத்தில் விஜய் வளர்ந்து வரும் நடிகராக இருந்தார். அந்த வகையில் விஜய் மற்றும் அஜித் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்கள். பத்து நாட்கள் ஷூட்டிங் முடிந்த நிலையில் அஜித் அந்த படத்தில் இருந்து விலகி விட்டார்.

அதன் பிறகு பிரசாந்திடம் விஜய் உடன் நடிக்க கேட்டுக் கொண்டு உள்ளனர். ஆனால் ஜீன்ஸ் படத்திற்காக பிரசாந்த் ஹேர்ஸ்டைல் மாற்றி உள்ளதால் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். இதைத்தொடர்ந்து இயக்குனர் பிரபு தேவாவிடம் கேட்டதற்கு வேறு ஒரு ஹீரோ நடிக்க இருந்த படத்தில் தான் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம்.

Also Read : எதிர்நீச்சல் ஜீவானந்தம் செய்த மிகப்பெரிய மாற்றம்.. எந்த சீரியலிலும் செய்யாத புரட்சிகரமான செயல்

அப்போது பேசிக் கொண்டிருக்கும் போது தான் சிவக்குமாரின் மகன் நல்ல அழகாக இருப்பார் ஆனால் சிவகுமார் சம்மதிக்க மாட்டாரு என்று இயக்குனர் கூறி இருந்தாராம். அப்போதுதான் யார் என்று பார்த்தால் சரவணன் போட்டோவை காண்பித்துள்ளனர். அதன் பிறகு எப்படியோ சம்மதிக்க வைத்து அந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார்.

அதாவது சூர்யாவாக உச்சத்தில் இருக்கும் நடிகர் தான் விஜய்யுடன் நேருக்கு நேர் படத்தில் அறிமுகமாகி இருந்தார். ஆரம்பத்தில் சூர்யாவுக்கு இப்படிதான் வாய்ப்பு வந்தது என்பதை மாரிமுத்து கூறி ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.  இன்னும் சினிமாவில் பல விஷயங்களை அவர் யூடியூப் வாயிலாக தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

Also Read : சோத்துலையும் அடிபட்டாச்சு, சேத்துலையும் அடிப்படனுமா?. ஜெயிலரால் வெளிநாடு புறப்பட்ட விஜய்

Trending News