வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

டாப் நடிகர்களுடன் 14 வருடம் கழித்து ஜோடி போடும் மூன்று நடிகைகள்.. பிறவி பலனை அடைந்த நீலாம்பரி

சில நடிகர் நடிகைகள் ஒரு படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தாலும், அவர்களின் ஜோடி ரசிகர்களுக்கு பிடித்துப்போக தொடர்ந்து பல படங்களில் நடித்து வருவர். ஆனால் சில ஜோடிகள் பல வருடங்கள் கழித்து தான் அவர்களுக்கு இணையக்கூடிய வாய்ப்புகள் வரும் அதுவும் 10, 20 ஆண்டுகள் கழித்து அதே ஜோடி ஒன்றாக நடிப்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் தெரிவிப்பர். அந்த வகையில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை மூன்று நடிகைகள் பல வருடங்கள் கழித்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டுள்ளனர். அவர்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

த்ரிஷா -விஜய்: நடிகர்கள் த்ரிஷா மற்றும் விஜய் இருவரும் இணைந்து ஆதி, கில்லி, திருப்பாச்சி, குருவி உள்ளிட்ட 4 படங்களில் ஜோடி போட்டு நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் வெற்றி ஜோடிகளாக வலம் வந்த அதே நேரத்தில் கிசுகிசுக்களும் அதிகமாக வர தொடங்கியது. இதன் காரணமாக இந்த வெற்றி ஜோடி பல வருடங்கள் இணையாமல் இருந்தனர். ஆனால் தற்போது லியோ படத்தின் மூலம் 14 ஆண்டுகள் கழித்து இருவரும் ஒன்றாக ஜோடி போட்டுள்ளதால் ரசிகர்கள் பெரும் ஆர்வமுடன் இவர்களை திரையில் பார்க்கவுள்ளனர்.

Also Read: ஜெயிலரின் வெற்றியை மறக்கடிக்க களமிறங்கும் லியோ.. லோகேஷ்-க்கு தளபதி போட்டோ ஆர்டர்

ஷாருக்கான்- பிரியாமணி: 2013 ஆம் ஆண்டு பேன் இந்தியா படமாக ரிலீசான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கான், தீபிகா படுக்கோனே உள்ளிட்ட பலர் நடித்து மாபெரும் வெற்றிப்பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் ஹிட்டான நிலையில் ஒன், டூ, த்ரீ என்ற பாடலுக்கு ஷாரூக்கானுடன் இணைந்து ஐட்டம் நடனம் ஆடியிருப்பார் நடிகை பிரியாமணி. இப்பாடலுக்கு முன்பு வரை மார்க்கெட்டில்லாமல் இருந்த ப்ரியாமணிக்கு, ஷாரூக்கானுடன் குத்தாட்டம் போட்ட பின் இவரது மார்க்கெட் தாறுமாறாக எகிறியது.

தற்போது இவர்கள் இருவரும் இணைந்து இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள ஜவான் படத்தில் நடித்துள்ளனர். இதில் ஜிந்தா பந்தா என்ற பாடலில் பிரியாமணி ஷாரூக்கானுடன் இணைந்து குத்தாட்டம் போட்டுள்ளார். கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து பிரியாமணி ஷாருக்கான் இணைந்து ஆடிய இந்த பாடல் வைரலாகி வரும் நிலையில், இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்திலும் ப்ரியாமணி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பயந்த மாதிரியே முத்தக் காட்சியுடன் வெளிவந்த ஜவான் பாடல்.. அட்லி மீது கொல காண்டில் இருக்கும் விக்கி

ரம்யா கிருஷ்ணன்- ரஜினிகாந்த்: 1999 ஆம் ஆண்டு இயக்குனர் கே எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படையப்பா திரைப்படத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து பெரும் வெற்றியை பெற்றது. இப்படத்தில் படையப்பாவாக இருக்கும் ரஜினிக்கு வில்லியாக நீலாம்பரி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் வாழ்ந்திருப்பார் என்று தான் சொல்லவேண்டும். அப்படத்தில் கடைசிவரை படையப்பாவுடன் சேராத ஏக்கத்தில் இருந்த இவர், 24 ஆண்டுகள் கழித்து அண்மையில் வெளியான ஜெயிலர் படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்து தனது ஆசையை நிறைவேற்றியுள்ளார்.

Also Read: ஜெயிலர் அலையில் மூழ்கடிக்கப்பட்ட படம்.. ஒரு வாரத்திலேயே தியேட்டரில் இருந்து துரத்தி அடிக்கப்படும் சம்பவம்

Trending News