பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு மிகவும் பத்திரமாக இருக்கும்.கழுகு பற்றியும் மற்ற அபாயங்களை பற்றியும் கவலைப்படாமல் அந்த இடத்தில் ஜம்மென்று இருக்கலாம். இப்பொழுது கமலின் நிலைமையும் அதை போல் தான் சீரும் சிறப்புமாக ஜம்மென்று இருக்கிறது.
லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்தில் ஆரம்பித்தது கமலின் ஏறுமுகம், அன்றிலிருந்து இன்று வரை மனிதன் இறங்கவே இல்லை. இப்பொழுது கமல் அடிப்படை சம்பளமே 150 கோடிகள் என நிர்ணயித்து விட்டார். கெஸ்ட் ரோல், ஹீரோ, வில்லன் என எந்த கதாபாத்திரம் என்றாலும் இதே தொகை தான்.
மணிரத்தினத்தின் தக்லைப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் கமல். படம் 90% முடிந்துவிட்டது. இன்னும் பாடல் காட்சிகள் மட்டும் மீதம் இருக்கிறதாம். இந்த படத்தில் கமலுடன் இணைந்து சிம்புவும் நடித்துள்ளார். அதற்குள் தக்லைப் படத்தின் வியாபாரத்தை ஆரம்பித்து விட்டார்கள்.
தக்லைப் படத்தின் ஆந்திரா டிஸ்ட்ரிபியூஷன் உரிமைகளை சுதாகர் ரெட்டி என்பவர் வாங்கியுள்ளார். இவர் இந்த படத்தை 20 கோடிகள் கொடுத்து கைப்பற்றியுள்ளார். இத்தனை ஆண்டு காலம் சினிமாவில் இருக்கும் கமலுக்கு இதுவரை எந்த படமும் இவ்வளவு பெரும் தொகைக்கு வியாபாரமானது கிடையாதாம்.
கர்நாடக திரையரங்கு உரிமைகளை பைவ் ஸ்டார் செந்தில் என்பவர் 15 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். இவர் தான் ராஜ்கமல் ஃபிலிம் தயாரித்த அமரன் படத்தை இரண்டு கோடிகளுக்கு வாங்கி 11 கோடிகள் லாபம் பார்த்தவர். இப்பொழுது தக்லைப் படத்திலும் பெரும் முதலீடு செய்துள்ளார்.