ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

Simbu : மீண்டும் தொட்டி ஜெயாவாக மாறிய சிம்பு.. வைரலாகும் தக் லைஃப் வீடியோ

சமீபத்தில் தக் லைஃப் படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்தது. மே 8 ஆம் தேதி இந்த படத்தின் அப்டேட்டை பட குழுவினர் அறிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை 10 மணிக்கு சிம்பு ரசிகர்களை குதூகலப்படுத்தும் படி ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது.

மணிரத்னம், கமல் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. அதை உறுதி செய்யும் விதமாகத்தான் இந்த வீடியோ வெளியாகி இருக்கிறது. சிம்பு ரீ என்ட்ரியில் பட்டையை கிளப்பி வரும் நிலையில் இந்த படம் அவருக்கு 48வது படமாகும்.

கமல் மற்றும் சிம்பு இருவருமே பல வருடமாக சினிமாவில் இருந்தாலும் இவர்கள் இருவரும் ஒரே படத்தில் முதல்முறையாக நடிக்க இருக்கின்றனர். அதோடு கமலின் தயாரிப்பில் சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார்.

தொட்டி ஜெயாவாக மாறிய சிம்பு

மேலும் தக் லைஃப் படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இதில் ஒரு பாலைவனத்தில் சிம்பு காரில் செல்லும் போது மற்ற இரண்டு கார்களை துப்பாக்கி வைத்து சுடும்படி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர்.

கிட்டத்தட்ட தொட்டி ஜெயாவா மீண்டும் சிம்பு களம் இறங்கி இருக்கிறார். ஏற்கனவே மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு மிரள விட்டிருப்பார். இந்த படமும் பக்கா ஆக்சன் படமாக உருவாக இருப்பது இந்த வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது.

இப்போது சிம்புவின் இந்த நியூ லுக் ரசிகர்களை கவர்ந்துள்ளது. தக் லைஃபில் சிம்புவின் அறிமுக வீடியோ இப்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.

Trending News