வெள்ளிக்கிழமை, நவம்பர் 15, 2024

தக் லைஃப் தல தப்புமா.? கமலின் ரிலீஸ் சென்டிமெண்ட் ரகசியம் தெரியுமா.?

கமல்ஹாசன் ஒரு கலைஞானி என்பதை யாராலும் மறுக்க முடியாது. மற்ற நடிகர்கள் தொழில் மீது அக்கறை கொண்டிருப்பது வழக்கம் என்றாலும் கமல் அதைத்தாண்டி ஒரு கலைஞனாக தொழில்நுணுக்கள் ஒவ்வொரு துறையிலும் கற்று அதில் மேதையாக இருப்பது சினிமாவுக்கு கிடைத்த வரம் என்று கூறலாம்.

இந்தியாவில் சகலகலா வல்லரவாக கோலோட்சி வரும் கமல் இதுவரை தன் 60 ஆண்டு கால சினிமாவில் மட்டும் 230 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இதில் பல படங்களுக்கு கதை, திரைக்கதை, தயாரிப்பிலும் பல சாதனைகள் செய்திருக்கிறார்.

இந்த நிலையில், ஒவ்வொரு நடிகருக்கும் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்குமென தனி செண்டிமெண்ட் உள்ளது. அதேபோல் கமலுக்கும் ஒரு செண்டிமெண்டி உள்ளது. அதாவது அவரது படங்கள் ஜூன் மாதத்தில் ரிலீஸ் செய்வது.

அதன்படி, அவர் நடிப்பில் உருவாகி ஜூன் மாதத்தில் வெளியான படங்கள் அனைத்துமே பிளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. அதுபற்றிய சுவாரஸ்ய தகவல்களை இனி பார்ப்போம்.

பஞ்சதந்திரம்

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான படம் பஞ்சதந்திரம். இப்படத்தில் கமலுடன் இணைந்து ஊர்வசி, சிம்ரன், ஜெயராம், ரமேஷ் அரவிந்த் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தேவா இசையமைத்திருந்தார். இப்படம் கடந்த 2002 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் தேதி ரிலீஸாகி வெற்றி பெற்றது.

தசாவதாரம்

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், கமல் நடிப்பில் உருவான இடம் தசாவதாரம். இப்படத்தில் கமல் 10 வேடங்களில் நடித்து அசத்தினார். அவருடன் இணைந்து அசின் 2 வேடங்களில் நடித்திருந்தார். ஹிமேஷ் ரேஸ்மியா, தேவிஸ்ரீ பிரசாத் ஆகிய இருவரும் இசையமைத்திருந்தனர். இப்படம் கமலின் கேரியரில் முக்கிய படமாக அமைந்த நிலையில் இப்படம் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூன் 13 ஆம் தேதி ரிலீசாகி சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

விக்ரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் விக்ரம். இப்படத்தில் கமலுடன் இணைந்து பக்த் பாசில், விஜய்சேதுபதி, சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அனிருத் இசையமைப்பில் உருவான இப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் குவித்து இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. இது லோகேஷின் எல்.சி.யுவின் கீழ் உருவான நிலையில் இப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி ரிலீசாகி மாபெரும் வெற்றி பெற்றது.

தக்லைஃப்

30 ஆண்டுகளுக்குப் பிறகு கூட்டணி அமைத்தும் இந்தியா முழுவதும் மீண்டும் அனல் பறக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த முடியும் என்பதற்கு கமல்- மணிரத்னம் கூட்டணிதான் உதாரணம். இதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, இதில் ஜெயம்ரவி, கவுதம் கார்த்தி, சிம்பு, ஜோஜு ஜார்ஜ், திரிஷா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் டீசர் கமல் பிறந்த நாளில் வெளியாகி அதிக பார்வைகளைப் பெற்றுள்ளது. இப்படம் வரும் 2025 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கமலின் ஜூன் மாத சென்டிமெண்ட்

கமல் நாத்திகராக இருந்தாலும் ஏன் ஜூன் மாத செண்டிமெண்ட்டை விரும்புகிறார்? அவரின் பெரிய புராஜக்ட் படங்கள் அனைத்தும் ஜூனில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகி வசூல் குவித்ததால்தான் தக்லைஃப் படத்தையும் ஒரு புரடியூசராக ஜுன் 5 ஆம் தேதி ரிலீஸ் செய்கிறாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால் கமல் எதற்கும் செண்டிமெண்ட் பார்ப்பதில்லை. அவர் மற்ற நடிகர்களுடன் போட்டிபோட விரும்புவதில்லை. அதனால் மத்தியில் உள்ள மாதமாக ஜுனை தேர்வு செய்து தனது தனிப்பட்ட விருப்பமாகவே அவர் படங்களை ரிலீச் செய்கிறார். இதில் செண்டிமெண்டுக்கு இடமில்லை எனவும் பலரும் கூறி வருகின்றனர். இருப்பினும் இதற்கான காரணத்தை கமல்தான் அவரது மொழியில் புரிய வைக்க வேண்டும் என சினிமா விமர்சகர்கள் அவரிடம் கேட்டு வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News