திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

நடிகர்களுக்கு இணையாக ரெட் கார்டு பிரச்சனையில் சிக்கிய நடிகைகள்.. ஓவராக ஆட்டம் போட்ட தனுஷ் பட நடிகை

Tamil Cinema Producer Council: ஒரு சில நடிகர்களால் தயாரிப்பாளர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் பூதாகரமாக வெடித்துக் கொண்டிருக்கின்றன. படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டு பின்னர் நடிக்காமல் இருப்பது, படப்பிடிப்புக்கு தாமதமாக வருவது, சம்பளப் பிரச்சனை என அடுத்தடுத்து நிறைய நடிகர்கள் மீது தயாரிப்பாளர் சங்கம் புகார் தெரிவித்து வருகிறது. இதற்கு சரியான பதில் அளிக்காத நடிகர்களுக்கு ரெட் கார்டு கொடுக்கும் அளவிற்கு இந்த பிரச்சனை பெரிதாகி இருக்கிறது.

கடந்த ஜனவரி மாதம் தெலுங்கு சினிமா உலகின் தயாரிப்பாளர் சங்கத்தினர் இதுபோன்ற பிரச்சனையை கவனத்திற்கு கொண்டு வந்தனர். இதையே தான் தற்பொழுது தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்தினர் பேசு பொருளாக ஆக்கியிருக்கிறார்கள். நடிகர்கள் சிம்பு முதல் விஷால் வரை இந்த பிரச்சனையில் சிக்கி இருக்கிறார்கள். நடிகர் தனுஷின் மீதும் புகார் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Also Read:குடுமி, தாடி, கையில் துப்பாக்கியுடன் மிரட்டும் தனுஷ்.. இணையத்தை ஆக்கிரமிக்கும் கேப்டன் மில்லர் போஸ்டர்

இந்த நிலையில் நடிகர்களுக்கு நாங்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிப்பதற்காக இரண்டு பிரபல ஹீரோயின்கள் தயாரிப்பாளர்களின் புகாரில் சிக்கி இருக்கிறார்கள். இந்த நடிகைகளும் புகார் மனுவிற்கு சரியான பதில் அளிக்கவில்லை என்றால் ரெக்கார்ட் அளவிற்கு இந்த பிரச்சனை போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகைகள் தங்களுடன் அழைத்து வரும் மேக்கப் ஆர்டிஸ்ட், ஹேர் ஸ்டைலிஸ்ட், உதவியாளர்கள் என அத்தனை பேருக்கும் தயாரிப்பாளர்களின் பட்ஜெட்டிலேயே சம்பளம் வாங்கிக் கொடுப்பதாக ஏற்கனவே ஒரு புகார் இருந்தது. இதில் நடிகைகள் லட்சுமி ராய் மற்றும் அமலாபால் இருவரும் படப்பிடிப்புக்கு வரும்பொழுது பத்து பவுன்சர்களுடன் வருவதாக தற்போது தயாரிப்பாளர்கள் தங்களுடைய சங்கத்தில் புகார் அளித்து இருக்கிறார்கள்.

Also Read:சரக்கு தீர்ந்த நிலையில் நிராயுதபாணியாக நிற்கும் இயக்குனர்.. ஆள விடு என எஸ்கேப் ஆன தனுஷ்

கண்டிப்பாக இந்த நடிகைகள் அவர்களுடைய 10 பவுன்சர்களுக்கும் தயாரிப்பாளர்கள் செலவில் தான் சம்பளம் கொடுக்க சொல்லி இருப்பதாக தெரிகிறது. லட்சுமி ராய் மற்றும் அமலாபால் இருவருக்குமே தமிழ் சினிமாவில் அந்த அளவுக்கு பட வாய்ப்புகள் எதுவுமே இல்லை என்பது நன்றாக தெரிந்த விஷயம் தான். கிடைக்கும் ஒன்றிரண்டு பட வாய்ப்புகளையும் இப்படி ஓவர் அலப்பறையை கூட்டி கெடுத்துக் கொள்வது போல் தெரிகிறது.

அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வரும் ஹீரோயின்கள் என்றால் கூட ஏதோ அட்ஜஸ்ட் செய்து கொள்வார்கள் தயாரிப்பாளர்கள். லோ பட்ஜெட் படங்களுக்கு இது போன்ற கதாநாயகிகளை அணுகும் பொழுது அவர்களும் இப்படி செலவிழுத்து விடுவது தான் தற்போது இந்த புகாருக்கு காரணமாக அமைந்திருக்கிறது. அமலாபால் மற்றும் லட்சுமி ராய் இந்த புகாருக்கு சரியான பதில் அளிக்கவில்லை என்றால் இவர்களுக்கும் ரெட் கார்டு நிலைமை தான்.

Also Read:மற்ற பிரபலங்களின் படங்களுக்கு பாடி கொடுத்த 5 நடிகர், நடிகைகள்.. கார்த்தியை தூக்கிவிட்டு அழகு பார்த்த தனுஷ்

Trending News