நவம்பர் 20-ஆம் தேதியான நாளை தியேட்டர்களில் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த படங்கள் வெளியாக உள்ளன. குறிப்பாக தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் முதல் புதுமையான கதைக்களங்களைக் கொண்ட சிறிய படங்கள் வரை ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தயாராக உள்ளன.
தனுஷ்,மம்மூட்டி இணைந்து நடித்துள்ள ‘ஓம்’ திரைப்படம் இந்த வாரத்தின் முக்கியமான வெளியீடாகப் பார்க்கப்படுகிறது.
ஆக்ஷன் மற்றும் திரில்லர் அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அதேபோல் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ படம் தந்தை – மகள் பாசத்தை மையமாகக் கொண்ட குடும்ப உணர்வுகளும் திரில்லர் அம்சங்களும் கலந்த படமாக வெளியாகிறது.
கீர்த்தி சுரேஷ்,மிஷ்கின் இணைந்து நடித்துள்ள ‘சத்யவான் சாவித்திரி’படம் நீதிமன்றப் பின்னணியில் உருவாகியுள்ளது.வித்தியாசமான கதைக்களம் மற்றும் கீர்த்தி சுரேஷின் நடிப்பு இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இதனுடன் சசிகுமார் – சரத்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள ‘நா நா’,’FLAG’,’வெகுளி’,’வயலட் கனவு’ஆகிய படங்களும் நாளைய வெளியீட்டுப் பட்டியலில் கவனம் பெறுகின்றன.
மேலும் துல்கர் சல்மான் நடித்துள்ள தெலுங்கு படமான ‘ஆகாசம்லோ ஓக தாரா’வும் நாளை வெளியாகிறது.
இப்படி ஒரே நாளில் பல படங்கள் திரைக்கு வருவதால் ரசிகர்களுக்கு தேர்வு செய்ய ஏராளமான வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
இதில் எந்தப் படம் ரசிகர்களின் மனதைக் கவரும், எந்தப் படம் வசூலில் முன்னிலை பெறும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.இறுதியில் ரசிகர்களின் வரவேற்பும் திருப்தியான விமர்சனங்களுமே படங்களின் வெற்றியைத் தீர்மானிக்கப் போகின்றன.




