திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

போலீஸ் கதாபாத்திரத்தில் வெற்றிகண்ட 10 ஹீரோக்கள்.. சத்திரியனுக்கு சாவே இல்ல என மிரட்டிய விஜயகாந்த்

தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். அதிலும் சிறப்பாக போலீஸ் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து அதற்கென தனி பெயரையும் புகழையும் பெற்றுள்ள டாப் 10 கதாநாயகர்களின் லிஸ்ட் வெளியாகி ரசிகர்களை ஆர்வத்துடன் பார்க்க வைக்கிறது அதிலும் கேப்டன் விஜயகாந்த் அடிச்சுக்க ஆளே இல்லை என்கின்ற அளவுக்கு போலீஸ் கெட்டப்பில் மிரள விட்டிருப்பார்.

ரஜினிகாந்த்: ஆக்ரோஷமான போலீஸ்கதாபாத்திரத்தில் நடித்தவர்களின் மத்தியில் ஸ்டைலிஷ் போலீசாக வளம் வந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த மூன்று முகம், கொடி பறக்குது போன்ற படங்களில் கலக்கியுள்ளார். அலெக்ஸ் பாண்டியன் என்றால் ரஜினி தான் என்ற அளவிற்கு தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருப்பார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த தர்பார் படம் ரசிகர்களால் ரசிக்கக்கூடிய வகையில் இருந்தது. போலீஸ் கெட்டப்பில் கலக்கிய டாப் 10 நடிகர்களின் லிஸ்ட்டில் ரஜினிகாந்த் 6-வது இடத்தில் உள்ளார்.

Also Read: பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி தயாரிப்பாளர்களை துண்டை போட வைத்த 5 படங்கள்.. விக்ரம் கொடுத்த படு மொக்கை

கமலஹாசன்: இவர் நடிப்பில் வெளிவந்த மூன்று முக்கிய திரைப்படங்களான குருதிப்புனல், காக்கி சட்டை, வேட்டையாடு விளையாடு போன்ற படங்களில் நடித்து தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி இருப்பார். இவர் நடித்த குருதிப்புனலில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எவ்வாறு தீவிரவாதிகளின் தந்திரத்தை முறியடிக்கலாம் என்று கன கட்சிதமாக நடித்து இவரின் கதாபாத்திரத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் படம் முழுவதற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார்.

அதிலும் இன்றுவரை வேட்டையாடு விளையாடு படத்தை பிடிக்காத ஆளை இருக்க முடியாது என்று கூட கூறலாம். படத்தில் வரும் வசனங்கள் இன்று வரை பலருக்கு பிடித்த ஒன்றாகவே இருக்கிறது. போலீஸ் கெட்டப்பில் புகழ்பெற்ற டாப் 10 ஹீரோஸ் லிஸ்டில் கமலஹாசன் 5வது இடத்தை பிடித்துள்ளார்.

விக்ரம்: சியான் எந்த கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதனை அருமையாக ஏற்று நடித்து அதற்கு உயிரூட்ட கூடியவர் மற்றும் அந்த கதாபாத்திரமாகவே மாறக்கூடியவர் விக்ரம். அதிலும் இவரின் நடிப்பில் அதிக அளவில் போலீஸ் கதாபாத்திர படங்கள் வெளிவராமல் இருந்தாலும் சாமி படத்தில் நிஜ போலீஸ் எப்படி இருக்க வேண்டும் என்பது போலவே அப்படியே நடித்துக் காட்டி இருப்பார். இந்தப் படத்தில் அருமையாக நடித்ததற்காக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தே இவரை பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சியான் விக்ரம் டாப் 10 போலீஸ் கதாபாத்திர லிஸ்டில் 4-வது இடத்தை பிடித்துள்ளார்.

Also Read: 6 உச்ச நட்சத்திரங்களூடன் நடித்த ஒரே நடிகை.. கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஹீரோக்கள் விட்ட ஜொள்ளு

சூர்யா: இவர் நடிப்பில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த படங்கள் அதிக அளவில் வெளிவராமல் இருந்தாலும் அவர் நடித்த ஒரு சில படங்களிலேயே அதற்கான பெயரை பெற்று விட்டார். அவை காக்க காக்க மற்றும் சிங்கம் போன்ற படங்களாகும். 2010 ஆம் ஆண்டு இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளிவந்த சிங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிங்கம் 2 சிங்கம் 3 என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். இவ்வாறு சூர்யா போலீஸ் கெட்டப்பில் புகழ்பெற்ற டாப் 10 ஹீரோஸ் லிஸ்டில் 3-வது இடத்தில் உள்ளார்.

அர்ஜுன்: இவர் பெரும்பாலான படங்களில் அதிக சண்டை காட்சிகளில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து போலீஸ் கதாபாத்திரத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பையே மிஞ்சும் அளவிற்கு தனது நடிப்பு திறமையால் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதிலும் குருதிப்புனல் படத்தில் அர்ஜுன் மற்றும் கமலஹாசன் காம்போ ரசிக்கக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது.

இதில் அர்ஜுன் கமலுக்கே பயங்கர டப் கொடுத்து நடித்திருப்பார். அர்ஜுன் படங்கள் என்றால் அதில் தேசப்பற்று பற்றிய வசனங்களும் உணர்ச்சி பூர்வ மிக்க பாடல்களும் இடம் பெற்றிருக்கும். இளைஞர்கள் மத்தியில் ஒரு உத்வேகத்தை கொடுக்கக்கூடிய படங்களாக அமைந்தது. அர்ஜுன்போலீஸ் கெட்டப்பில் கலக்கிய டாப் 10 நடிகர்களின் லிஸ்ட்டில் 2வது இடத்தை பிடித்துள்ளார்.

Also Read: பழைய வசூல் ரெக்கார்டை உடைக்க வாரிசு செய்யும் சித்து வேலை.. தளபதி உங்களுக்கே ஓவரா இல்லையா!

விஜயகாந்த்: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தவர் தான் விஜயகாந்த். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனுக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். இவர் நடிப்பில் காவல்துறை அதிகாரியாக நடித்து வெளிவந்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் படங்களாகும். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் ஆன கேப்டன் பிரபாகரன், சேதுபதி ஐபிஎஸ், சத்ரியன், புலன்விசாரணை, வல்லரசு போன்ற படங்களில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து நடிப்பையும் தாண்டி அதன் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார்.

அதிலும் சத்ரியன் படத்தில் “சத்ரியனுக்கு சாவே கிடையாது” என்று இவர் பேசும் மாஸ் வசனம் ரசிகர்களால் அதிக அளவில் ரசிக்கப்பட்டது. இந்தப் படங்கள் அனைத்தும் விஜயகாந்த்தின் தமிழ் சினிமா வாழ்க்கையில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த படங்கள் ஆகும். இவ்வாறு போலீஸ் கெட்டப்பில் மிரள விட்ட டாப் 10 கதாநாயகர்களின் லிஸ்டில் விஜயகாந்த்-க்கு முதலிடம் கிடைத்திருக்கிறது

இவர்களைத் தொடர்ந்து சரத் குமார் 7-வது இடத்திலும், சத்தியராஜ் 8-வது இடத்தையும், விஜய் 9-வது இடத்தையும் மற்றும் அஜித் குமார் 10-வது இடத்தையும் பிடித்துள்ளார்.

Trending News