வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

2023-இல் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகைகள்.. மார்க்கெட் இல்லனாலும் திரிஷாவை ஓரம் தள்ளிய நயன்

Top 10 Highest Paid Actresses in Tamil cinema: தமிழ் சினிமாவில் ரசிகர்கள் நாயகனை கொண்டாடும் அளவுக்கு நாயகியே கொண்டாட விட்டாலும் அழுத்தமான கதையுடன் நாயகியை மையப்படுத்தி எடுக்கும் படங்களை கொண்டாட தவறுவது இல்லை. நடிகைகள் தங்களது படங்களின் வெற்றிக்கேற்ப ரசிகர்களை ஆட்டிப்படைத்து வருகின்றனர்.

டாப் 10 வரிசையில் கடைசியில் இருப்பவர் தளபதி நாயகி மீனாட்சி சவுத்ரி. இவர் விஜய் 68 காக ஐம்பது லட்சம் ஊதியம் பெற்றுள்ளார். வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் நாயகனுக்கு 100 கோடி சம்பளம் கொடுக்கும்  தமிழ் சினிமா நாயகிக்கு ஒரு கோடி ஆவது கொடுத்திருக்கலாம் என்பது ரசிகர்களின் புலம்பல்.

செய்தி வாசிப்பாளராக தொடங்கி சின்னத்திரையின் மூலம் வெள்ளி திரைக்கு நுழைந்த பிரியா பவானி சங்கர், சம்பள விஷயத்தில் அடாவடி காட்டாமல் தயாரிப்பாளர்களின் ஃபேவரைட் ஆக இருந்து வருகிறார் இவர் நடித்த பத்துதல படத்திற்காக  60 லட்சம் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: விஜய்யுடன் நடித்து பாலிவுட் போன 5 நடிகைகள்.. தளபதிக்கு ஐஸ் வைத்து எஸ்கேப் ஆன பூஜா ஹெக்டே

காவலா பாடலின் மூலம் தமிழ்நாட்டை தெறிக்க வைத்த தமன்னா மார்க்கெட் குறைந்த நிலையில் ஒரு கோடியை சம்பளமாக பெற்று வருகிறார். ஜெயிலரின் காவலா  பாடலுக்காக மட்டும் அதிக தொகை வாங்கி உள்ளாராம்.

தனது வசீகர தோற்றத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் வால்பேப்பராக இருந்து வரும் பிரியங்கா மோகன் மூன்றே படங்கள் நடித்திருந்தாலும் படத்திற்கு 1.25 கோடி சம்பளம் வாங்கி மவுசு குறையாமல் தன் மார்க்கெட்டை பாதுகாத்து வருகிறார்.

அடுத்த இடத்திற்கு முன்னேறி இருப்பவர் காக்கா முட்டை அழகி ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். வெற்றியோ தோல்வியோ தனது சம்பளத்தை1.5  கோடி பிக்ஸ் செய்து தயாரிப்பாளர்களை தெறிக்க விடுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஐந்தாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் சமந்தா. வருடத்திற்கு ஒன்று இரண்டு படங்களே திரையில் தோன்றினாலும் தனது இயல்பான நடிப்பின் மூலம் கதையை வெற்றி பெற வைத்து விடுவதில் கில்லாடி ஆன சமந்தாவின் சம்பளமோ 3 கோடி.

தமிழ் தெலுங்கு  கன்னடம் ஹிந்தி என நான்கு மொழிகளிலும் கலக்கிக் கொண்டிருக்கும் நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா சம்பளமாக 4 கோடி வாங்கி நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

மூன்றாவது இடத்திற்கு முன்னேறியவர் நடன புயல் சாய் பல்லவி. ராஜ்கமல் பிலிம்ஸ் இன் எஸ் கே 21 க்காக ஒப்பந்தம் ஆகி உள்ளார்.  தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணியாக உள்ள சாய்பல்லவியின் ஊதியமோ 5 கோடி.

பொன்னியின் செல்வனில் குந்தவையாகவும் லியோவின் விஜய்யின் சத்யாவாகவும் தோன்றி எவர்கிரீன் நடிகையாக மீண்டும் தன்னை நிரூபித்த திரிஷாவின் மார்க்கெட் ரேட்டோ 6 முதல் 8 கோடி. என்றும் இளமையாக வசீகர தோற்றத்துடன் பல ஆண்டுகளாக ரசிகர்களை கட்டி போட்டு உள்ளார் இந்த குந்தவை.

டாப் டென் வரிசையில் முன்னணியில் இருப்பவர் நயன்தாரா. திருமணம் குழந்தை குட்டி என்று செட்டிலான பிறகும் தமிழ் சினிமாவில் பிக்கீலேயே இருந்து வருகிறார் இந்த தமிழ்நாட்டு மருமகள். 10 கோடிக்கும் குறையாது சம்பளம் வாங்கும் நயன்தாரா ஜவானின் மூலம் பாலிவுட்டிலும் தனது இன்னிங்ஸே ஆரம்பித்துவிட்டார். மார்க்கெட் இருக்குதோ இல்லையோ பத்து வருடத்திற்கு மேலாக திரையில் கோலோச்சி சக நடிகையான திரிஷாவை எப்போதும் ஓரம் கட்டியுள்ளார் நயன்தாரா

Also Read: சோலோ ஹீரோயின் கதையா.? உடனே ஓகே சொல்லும் 5 நடிகைகள், நயன் மார்க்கெட் கம்மியானதால் வந்த விளைவு

Trending News