ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

உலக கிரிக்கெட் வரலாற்றில் அதிக வாத்து முட்டை வாங்கிய 10 வீரர்கள்.. இந்தியர் மற்றும் வீரரின் இடம்

கிரிக்கெட் விளையாட்டில் ரன் ஏதும் அடிக்காவிட்டால் அதை வாத்து முட்டை அவுட் என்று கூறுவார்கள். அப்படி அதிக முறை டக் அவுட்டில் வெளியான வீரர்களின் முதல் பத்து இடத்தை இதில் பார்க்கலாம். அதில் ஒரு இந்திய வீரரும் அடங்குவார். அவரும் எத்தனாவது இடத்தை இதில் பிடித்துள்ளார் என்பதை பார்க்கலாம்.

10. ஷேன் வார்னே: பந்து வீச்சில் மாபெரும் சாதனையாளரான இவர் 44 முறை ரன் ஏதும் எடுக்காமல் அதாவது டக் அவுட் ஆகி வெளியே சென்று இருக்கிறார். ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த இவர் மொத்தம் 708 விக்கெட்களை எடுத்து சாதனை செய்துள்ளார்,

9.ஜாகீர் கான்: இவரும் 44 முறை டக்கவுண்டாகி வார்னேவை சமன் செய்துள்ளார். ஆனால் இவர் விளையாடிய போட்டிகள் குறைவுதான். அதிக போட்டிகள் விளையாடியதால் வார்னே பத்தாவது இடத்திலும், இவர் ஒன்பதாவது இடத்திலும் இருக்கிறார்கள்.

8.வாசிம் அக்கரம்: பாகிஸ்தான அணியில் பௌலிங்கில் தனது ஆதிக்கத்தை செலுத்திய இவர் ஒரு ஆல் ரவுண்டர் வீரர். ஏழாவது, எட்டாவது வீரராக களம் இறங்கும் இவர் கிட்டத்தட்ட 45 முறை டக் அவுட் ஆகி வெளியே சென்று இருக்கிறார்

7. டேனியல் விட்டோரி: நியூசிலாந்தின் தலைசிறந்த ஸ்பின்னர்களுள் இவரும் ஒருவர்.அதிக முறை டக் அவுட் ஆனதில் இவருக்கு ஏழாவது இடம். இவர் 46 முறை டக் அவுட்ஆகி வெளியேறியிருக்கிறார்.

6. மகிலா ஜெயவர்த்தனே: இவர் அணியில் கேப்டனாக இருந்த போது தான் இந்திய அணி மகேந்திர சிங் தலைமையில் உலக கோப்பையை வென்றது. இவர் ஓரளவு நின்று விட்டால் இவர் விக்கெட்டை எடுப்பது மிகவும் கடினம். இவர் 47 முறை டக் அவுட் ஆகி இருக்கிறார்.

5. ஸ்டுவர்ட் ப்ராடு: இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளரான இவர் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் எடுக்கக் கூடிய ஆற்றல் கொண்டவர். இவரும் ஜேம்ஸ் அண்டர்சனும் எதிரணி வீரர்களை நிலைகுலையச் செய்வார்கள். ப்ராடு 49 முறை டக் அவுட் ஆகி உள்ளார்.

4.க்ளென் மெக்ராத் : ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் க்ளென் மெக்ராத். இதுவரை 49 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

3.சனத் ஜெயசூர்யா: அதிரடி ஆட்டத்தை எல்லா அணிகளுக்கும் கற்றுக் கொடுத்தவர் இவர். அப்படி தைரியமாக முதலில் இருந்ததே அடித்து ஆடும் இவர் 53 தடவை டக் அவுட் ஆகியுள்ளார்.

2.கோர்ட்னே வால்ஷ்: இவர் விளையாடிய காலத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்துவது கடினம். இவரும் இவரது அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகிய அம்ருஸ்சும் எதிரணிகளை நிலைகுலையச் செய்வார்கள். வால்ஷ் தன் பங்கிற்கு 54 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

1.முத்தையா முரளிதரன்: உலகத்தின் தலைசிறந்த பவுலரான இவர் இலங்கையை சேர்ந்தவர். இவரது பூர்வீகம் இந்தியா தான் இவர் டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளும் ஒரு நாள் போட்டிகளில் 534 விக்கெட்டுகளும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இவர் தன் பங்கிற்கு 59 முறை டக் அவுட் ஆகி வெளியேறி உள்ளார்.

Trending News