வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

டாப் 10 சீரியல் நடிகைகளின் மொத்த லிஸ்ட்.. முதலிடம் பிடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்!

வெள்ளித்திரை கதாநாயகிகளை ரசிப்பது போலவே சின்னத்திரை கதாநாயகிகளையும் ரசிப்பதில் ரசிகர்கள் எவ்வித பாகுபாடும் பார்ப்பதில்லை. அந்த வகையில் சோசியல் மீடியாவில் சின்னத்திரை நடிகைகளை பின் தொடர்வது அவர்கள் பதிவிடும் புகைப்படம் மற்றும் ரீல்ஸ்களை ட்ரெண்டாக்கி கொண்டிருக்கின்றனர். எனவே தற்போது 2021ம் ஆண்டிற்கான டாப் 10 சீரியல் நடிகைகளின் லிஸ்ட் வெளியாகி இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.

சன் டிவி தொலைக்காட்சியில் சுந்தரி என்ற சீரியலில் நடித்து வரும் சுந்தரி கதாபாத்திரத்திற்கு 10வது இடம் கிடைத்துள்ளது. கேப்ரியலா என்ற இந்த நடிகையை சீரியல் கதாபாத்திரத்திற்கு அதுவும் கிராமத்து கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக அமைந்துள்ளார். ஒன்பதாவது இடம் மௌனராகம்2 சீரியலின் கதாநாயகி ரவினாவிற்கு கிடைத்துள்ளது. இவர் சீரியலில் நடிப்பதற்கு முன்பே திறமையாக நடனம் ஆடுவதால் பல்வேறு நடன நிகழ்ச்சியின் பங்கேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எட்டாவது இடம் அபி டெய்லர் சீரியல் நடிகை ரேஷ்மா பெற்றுள்ளார். இதே சீரியலில் தன்னுடன் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் மதன் என்பவரை சமீபத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். ஏழாவது இடம் கோகுலத்தில் சீதை என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஆஷா கௌடா பெற்றுள்ளார். இவரும் சோஷியல் மீடியாவில் ரசிகர்களுடன் உரையாடுவதையும் வீடியோஸ் போடுவதையும் வழக்கமாகக் கொண்டதன் மூலம் ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

ஆறாவது இடம் ராஜா ராணி2 சீரியலில் வில்லி அர்ச்சனாவுக்கு கிடைத்துள்ளது. அர்ச்சனா சோஷியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக இருந்து அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படத்தையும் வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களிடையே பிரபலம் அடைந்துள்ளார். ஐந்தாவது இடம் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கும் ஜனனி என்பவருக்கு கிடைத்துள்ளது. இவர் செம்பருத்தி போன்ற இன்னும் பல சீரியல்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆறாவது இடம் தற்போது டிஆர்பி-யில் முதலிடம் பிடித்துக் கொண்டிருக்கும் சன் டிவியின் கயல் சீரியலின் கதாநாயகி சைத்தன்யா ரெட்டிக்கு கிடைத்துள்ளது. இவர் ஏற்கனவே ஜீ தமிழில் ‘யாரடி நீ மோகினி’ என்ற சீரியலில் வில்லியாக நடித்து ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டார்.

4-வது இடம் செம்பருத்தி சீரியல் கதாநாயகி ஷபானா பெற்றுள்ளார். இவர் செம்பருத்தி சீரியலின் மூலம் எக்கச்சக்கமான இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார். இவர் சமீபத்தில் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கும் ஆரியன் என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.

மூன்றாவது இடம் திருமணம் சீரியல் நடிகை ஷ்ரேயாவிற்கு கிடைத்துள்ளது. இவர் சமீபத்தில் தன்னுடன் நடித்த சீரியல் நடிகர் சித்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது ஸ்ரேயா ‘ரஜினி’ என்ற புது சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவரைத் தொடர்ந்து 2வது இடம் விஜய் டிவியின் தேன்மொழி சீரியல் கதாநாயகி ஜாக்லினுக்கு கிடைத்துள்ளது. இவர் சீரியலில் நடிப்பதற்கு முன்பே தொகுப்பாளினியாக ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இதில் முதலிடத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் காவியா அறிவுமதிக்கு கிடைத்துள்ளது. இவரை அவருடைய ரசிகர்கள் குட்டி நயன்தாரா என்றே செல்லமாக அழைப்பதுண்டு. ஏனென்றால் இவர் பெரும்பாலும் நயன்தாரா போன்றே ரீல்ஸ் போடுவார்.

சில சமயம் நயன்தாரா போலவே மேக்கப் போட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார். தொடக்கத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக நடித்த சித்ரா மறைந்தபின், சித்ராவின் லெவலுக்கு ஈடுகொடுத்து காவியா அறிவுமதி சிறப்பாக நடித்து ரசிகர்களை தன்வசப்படுத்தி உள்ளார். அதுவே இவர் டாப் லிஸ்டில் முதலிடம் பிடித்து அதற்கு டாப் லிஸ்டில் முதலிடம் பிடித்ததற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

இவ்வாறு இந்த ஆண்டிற்கான சிறந்த 10 சீரியல் நடிகைகளின் லிஸ்டில் இடம் பெற்றிருக்கும் பிரபலத்திற்கு சோஷியல் மீடியாவில் அவர்களது ரசிகர்கள் எக்கச்சக்கமான வாழ்த்துக்களை குவித்து கொண்டிருக்கின்றனர்.

Trending News