வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

டிஆர்பி-யில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள்.. அதிரடி திருப்பத்தை ஏற்படுத்திய விஜய் டிவியின் சங்கமம்

சின்னத்திரை ரசிகர்கள் கடந்த வாரம் முழுவதும் எந்த சீரியலை விரும்பிப் பார்க்கிறார்கள் என்பதை அந்த வார டிஆர்பி ரேட்டிங்கை வைத்து தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் கடந்த வாரம் டிஆர்பி ரேட்டிங் இணையத்தில் வெளியாகி கலக்கிக் கொண்டிருக்கிறது.

இதில் வழக்கம்போல் எப்போதுமே டிஆர்பி-யில் டாப் இடத்தை பிடிக்கும் சன் டிவியின் கயல் சீரியல்தான் இந்த முறையும் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. 2-வது இடம் சன் டிவியின் சுந்தரி சீரியலுக்கும், 3-வது இடம் வானத்தைப்போல சீரியலுக்கும் கிடைத்திருக்கிறது.

Also Read: தீபாவளிக்கு ஒளிபரப்பாகும் 5 படங்கள்.. சூப்பர் ஸ்டார் படம் இல்லாத ஒரே வருத்தம் தான்

4-வது இடம் தான் விஜய் டிவி படாதபாடுபட்டு பல திட்டங்களைப் போட்டு நடத்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியலின் மகா சங்கமம் பெற்றிருக்கிறது. இந்த சங்கமத்தில் அதிரடி திருப்பங்களை ஏற்படுத்தி ரசிகர்களை பார்க்க வைத்தாலும்,  சுவாரசியம் குறைந்ததால் வழக்கம்போல் நான்காவது இடம்தான் கிடைத்தது விஜய் டிவிக்கு பெரிய ஏமாற்றத்தை தந்திருக்கிறது.

5-வது இடம் சன் டிவியின் கண்ணான கண்ணே சீரியலுக்கும், 6-வது இடம் அதிரடி காதல் கதையைக் கொண்ட ரோஜா சீரியலுக்கும் கிடைத்துள்ளது. அதேபோல் 7-வது இடம் பெண் அடிமைத்தனம் இந்தக் காலத்திலும் தழைத்தோங்கி இருப்பதை காண்பிக்கும் சன் டிவியின் எதிர்நீச்சல் இருக்கும் கிடைத்துள்ளது.

Also Read: சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட விஜய் டிவி.. பற்றி எரியும் கள்ளக்காதல் விவகாரம்

8-வது இடம் க்ளைமாக்ஸை நோக்கி விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியல் பெற்றிருக்கிறது. 9-வது இடம் போலீஸ் கெட்டப்பில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் சந்தியாவின் ராஜா ராணி 2 சீரியலுக்கு கிடைத்துள்ளது.

10-வது இடம் மீண்டும் சன் டிவியில் அன்பே வா சீரியல் பெற்றுள்ளது. இதுவே இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் டாப் 10 இடத்தில் இருக்கும் சீரியல்கள். இதில் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியலின் மகா சங்கமம் அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்த்த நிலையில் அது பின்னடைவை சந்தித்தது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Also Read: விஜய் டிவியின் டிஆர்பி-யை நொறுக்க சன் டிவி போட்ட பிளான்.. கைகொடுக்குமா தளபதியின் படம்

Trending News