Top 10 tamil worst movies in 2023: தமிழ் ரசிகர்களை சோதிப்பதற்காகவே 2023 சில படங்கள் வெளிவந்து கதற வைத்தன. சில படங்கள் வந்ததா என்று தெரியாமல் காணாமலும் போயின. ரசிகர்களுக்கு வித்தியாசமாக கொடுக்க வேண்டும் என்று தவறாக நினைத்து ரிஸ்க் எடுத்த படங்களின் வரிசை இதோ,
அகிலன்: கல்யாண்கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வெளிவந்த அகிலன், துரோகம் பண்ணு! துரோகம் பண்ணு என்று ரசிகர்களுக்கு பெரிய துரோகத்தை பண்ணி விட்டார் இயக்குனர். பொன்னியின் செல்வன் ஜெயம் ரவியா! இப்படத்தின் மூலம் பலரை நெஞ்சில் அடிக்க வைத்து விட்டார் இந்த அகிலன்.
கிக்: சந்தானம், மனோபாலா, செந்தில், கோவை சரளா என பல பேர் இருந்தும் காமெடி எங்கே என்று தேட வேண்டி இருந்தது. இதில் இரு அர்த்தம் கொண்ட ஜோக்குகள் வேறு. முடியல! முடியல! என்று படத்தின் இறுதிவரை கதற வைத்தனர் இந்த காமெடி பட்டாளங்கள்.
80ஸ் பில்டப்: சந்தானம் படம் என்று நம்பிக்கையோடு வந்த ரசிகர்களை அண்ணன் தங்கச்சி பந்தயம் சொல்லி ரசிகர்களை பந்தாடி விட்டனர். பல கதைகளை உட்பகுத்தி எது பட கதை என்றே தெரியாமல் ரசிகர்கள் முழித்திருக்க காமெடி என்ற பெயரில் சத்தம் போட்டு கூச்சலிட்டனர்.
Also read : 2023 உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய 10 படங்கள்.. இவர் நடிச்சா ஹிட் என ராசியான வில்லன் நடிகர்
பஹிரா: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த பஹிராவை நார் நாராக கிழித்து தொங்க விட்டனர். பழைய படங்களை ஞாபகப்படுத்துவது போல் இருந்தாலும் சமாளித்துக் கொண்டு பார்க்க பொறுமையின் உச்சத்தை தொட்டு விட்டார் இயக்குனர்.
ஜப்பான்: உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கார்த்தி நடிப்பில் வெளிவந்த ஜப்பானில் மாஸாக பேசுகிறேன் என்ற பெயரில் கடுப்பைக் கிளப்பி இருந்தார் கார்த்தி. கொள்ளையடிக்கும் ஜப்பான் கார்த்தியை பிடிக்க இரண்டு போலீஸ் தனி படை, போலீஸ் இடம் சிக்கினாரோ? இல்லையோ! ரசிகர்கள் ஜப்பானில் கார்த்தியிடம் சிக்கி படாத பாடு பட்டனர்.
ரத்தம்: விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த ரத்தம் ஒரு கிரைம் ஸ்டோரி என்று நம்ப வைப்பதற்கு ரசிகர்களை பாடாய்படுத்தினார் இயக்குனர். சுவாரஸ்யம் இல்லாமல் தேவையில்லாத ஆக்சன் காட்சிகளை புகுத்தி ஸ்லொவ் மோஷனில் கதையை கொண்டு போய் திணறடித்தார் இப்படத்தின் இயக்குனர் அமுதன்.
கோஸ்டி: கல்யாண் இயக்கத்தில் காஜல் அகர்வால் இரு வேடங்களில் நடித்த கோஸ்டி திரைப்படத்தில் அமானுஷ்ய சக்தி காஜல் அகர்வால் பிடித்து ஆட்டியதோ இல்லையோ ரசிகர்களை ஆட்டிவிட்டது. காஜல் போலீசாக இருந்து நிறைய லாஜிக்குகளை மீறி ஏதோ சொல்ல வந்தார். இறுதியில் வில்லனை வென்று விட்டு ரசிகர்களை டீலில் விட்டு விட்டார்.
எல்ஜிஎம்: தோனியின் தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா நடிப்பில் வெளிவந்த எல்ஜிஎம் காதல் கதையா அல்லது குடும்ப படமா அல்லது குடும்பத்தை உருவாக்க போகிற படமா என்ற பல கேள்விகளை ஏற்படுத்தியது. காதலி காதலுடன் டேட்டிங் செல்வதை விட்டுவிட்டு மாமியாருடன் டேட்டிங் செல்வது மாதிரி இருந்தது இந்த எல்ஜிஎம்.
கருங்காப்பியம்: ஐந்து கதைகளின் கோர்வையாக வந்தது கருங்காப்பியம் படத்தில் உள்ள ஒற்றுமையை கண்டுபிடிக்க ரசிகர்கள் மிகவும் சிரமப்பட வேண்டி இருந்தது. காஜல் அகர்வால், ரெஜினா, ஜான் விஜய் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் இப்படத்தில் வரும் பேய், வில்லனை பழி வாங்காமல் ரசிகர்களை பலி வாங்கியது.
காசேதான் கடவுளடா: பழைய படத்தை ரீமேக் செய்கிறேன் என்ற பெயரில் அப்படியே காட்சி மாறாமல் நடிகர்களை மட்டும் மாற்றி எடுத்தனர் . கிளாசிக் படத்தையே பார்த்து விடலாம் என்ற அளவுக்கு ரசிகர்களின் பொறுமையை சோதித்து இருந்தார் இயக்குனர் கண்ணன்.
Also read : 2023 ல் பெரிய ஹீரோக்களை திரும்பி பார்க்க செய்த 6 இயக்குனர்கள்.. சித்தா மூலம் சிந்திக்க வைத்த இயக்குனர்