புதன்கிழமை, நவம்பர் 27, 2024

தமிழ் சினிமாவில் மனதை வென்ற 5 பாட்டிகள்.. விஷால், வில்லனுக்கே தண்ணிகாட்டிய அப்பத்தா

சினிமாவில் பல படங்களில் ஒரு சில கதாபாத்திரங்கள் நம் வாழ்நாளில் மறக்க முடியாத அளவிற்கு இருக்கும். அவ்வாறு பல படங்களில் பாட்டி கதாபாத்திரங்களில் சிலர் நடித்துள்ளனர். இவர்கள் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும் இன்றளவும் ரசிகர்களை கவர்ந்துள்ளனர்.

எஸ் என் லட்சுமி: தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் எஸ் என் லட்சுமி. இவர் தனது இறுதி காலங்களிலும் சின்னத்திரை தொடர்களில் நடித்தார். இவர் கமலஹாசனின் மைக்கேல் மதன காமராஜன், மகாநதி, விருமாண்டி போன்ற பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

Sn-lakshmi
Sn-lakshmi

தேனி குஞ்சரம்மாள்: பல படங்களில் ஏ ஆர் ரகுமான் இசையில் பின்னணி பாடகியாக பணியாற்றியவர் தேனி குஞ்சரம்மாள். இவர் குஷி, காதல் சடுகுடு, விசில், திருப்பாச்சி, சிவகாசி, தமிழ்படம் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும், இவருடைய பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

Theni-Kunjaramma
Theni-Kunjaramma

ரங்கம்மாள்: தமிழ், மலையாளம், ஹிந்தி போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர் கே ஆர் ரங்கம்மாள். இவர் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் வடிவேலுடன் இவர் இணைந்த காமெடி காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

Rangamma-paati
Rangamma-paati

பரவை முனியம்மா: பலராலும் நன்கு அறியப்படுபவர் பரவை முனியம்மா. தூள் படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. அதன்பிறகு இவர் கோவில், தேவதையை கண்டேன், சண்டை, தமிழ்படம், பலே பாண்டியா, வீரம் போன்ற படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு சின்னத்திரையில் சமையல் நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற்றார்.

Paravai-Muniyamma-
Paravai-Muniyamma-

குலப்புள்ளி லீலா: மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்தவர் தான் குலப்புள்ளி லீலா. இவர் ரஜினியின் முத்து படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு பல படங்களில் நடித்தாலும் விஷாலின் மருது படத்தில் அவருடைய அப்பத்தாவாக தன்னுடைய கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் குலப்புள்ளி லீலா.

- Advertisement -spot_img

Trending News