இயக்குனர் இமயம் கே பாலச்சந்தர் அவர்கள் தமிழ் சினிமாவிற்கு சில அரிய படைப்புகளை கொடுத்துள்ளார். இவர் தன் படங்கள் மூலம் பல நடிகர், நடிகைகளை அறிமுகம் செய்து வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் தற்போது முக்கிய நடிகர்களாக உள்ள ரஜினி, கமல் ஆகியோரை பாலச்சந்தர் தான் அறிமுகம் செய்து வைத்தார். பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான சிறந்த 5 படங்களை பார்க்கலாம்.
எதிர்நீச்சல் : கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1968 இல் நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், ஜெயந்தி, சௌவுகார்ஜானகி, முத்துராமன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் எதிர்நீச்சல். இப்படத்தில் வறுமையிலும் கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. எதிர்நீச்சல் படத்தில் ஐந்து குடும்பங்கள் வசிக்கும் ஒரு ஒட்டு கொடுத்தன குடியிருப்பில் அனாதையான நாகேஷ் மாடிப்படிக்கு கீழே குடியிருந்து கொண்டு கல்லூரிப்படிப்பை படித்த முன்னேறுவார்.
அவள் ஒரு தொடர்கதை : கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1974ஆம் ஆண்டு சுஜாதா, ஜெய்கணேஷ், கமலஹாசன், படாபட் ஜெயலட்சுமி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் அவள் ஒரு தொடர்கதை. குடும்பபாரத்தை சுமக்கும் பெண், திருமணம் செய்துக்கொள்ளாமல் வேலைக்கு செல்லும் பெண்ணின் கதையை அடிப்படையாகக் கொண்டது.
அபூர்வ ராகங்கள் : கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1975ஆம் ஆண்டு கமலஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீவித்யா, ஜெயசுதா ஆகியோர்களின் நடிப்பில் வெளியான திரைப்படம் அபூர்வ ராகங்கள். இப்படத்திற்கு எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்து இருந்தார். ஒரு அப்பா, மகன் இருவரும் அம்மாவையும், மகளையும் திருமணம் செய்தால் உறவு என்ன. இப்படி ஒரு கதையா என ரசிகர்களை முகம் சுளிக்க வைக்காமல் விரும்பிப் பார்க்கச் செய்தது பாலச்சந்தரின் இயக்கம்.
வறுமையின் நிறம் சிகப்பு : கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1980ஆம் ஆண்டு கமல்ஹாசன் ஸ்ரீதேவி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் வறுமையின் நிறம் சிகப்பு. இப்படத்தில் புரட்சிகரமான சிந்தனை உடைய இளைஞன் வேலை கிடைக்காமல் வறுமையில் வாடுகிறான். இப்படத்தில் பொதுவுடைமை சிந்தனை கொண்ட ரங்கன் கதாபாத்திரத்தில் கமல் நடித்திருந்தார்.
தில்லு முல்லு : கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தில்லு முல்லு. இப்படத்தில் ரஜினி, மாதவி, தேங்காய் சீனிவாசன், சௌகார் ஜானகி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் வேலையை தக்க வைப்பதற்காக ஒரு ஆள் இரட்டையர் என சொல்லிவிட்டு அதனால் அவர் படும்பாட்டை நகைச்சுவையாக சொன்ன படம். ஒரு பொய் 1000 பொய்களுக்கு வழிவகுக்கும் என்பதை தில்லு முல்லு படம் ரசிகர்களுக்கு உணர்த்தியிருந்தது.