ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பிறந்தநாள் ஸ்பெஷல் – மறக்கமுடியாத கார்த்திக்கின் 6 படங்கள்.. மனுஷன் ஒன்னு ஒன்னும் வேற ரகம்

நடிகர் சிவகுமாரின் இளைய வாரிசான கார்த்தி தற்போது சினிமாவை பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். அமெரிக்காவில் தனது படிப்பை முடித்துவிட்டு பருத்திவீரன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்நிலையில் தற்போது விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் கார்த்தி நடித்து வருகிறார். கார்த்தியின் பிறந்தநாளான இன்று அவர் நடிப்பில் வெளியான சிறந்த 5 படங்களை பார்க்கலாம்.

பருத்திவீரன் : கார்த்தி தன்னுடைய முதல் படமான பருத்திவீரன் படத்திலேயே முத்திரையைப் பதித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு இணையாக முத்தழகு கதாபாத்திரத்தில் பிரியாமணியும் நடித்து அசத்தியிருப்பார். கிராமத்துக் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களை கவர்ந்தது. மேலும் கார்த்தியின் முதல்படமே சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

பையா : லிங்குசாமி இயக்கத்தில் முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக வெளியானது பையா. இப்படத்தில் கார்த்தி, தமன்னா இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. இப்படம் முழுக்க ஒரு கார் பயணம் தான் .மேலும் யுவனின் இசை படத்திற்கு வலு சேர்த்தது. பையா படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி கார்த்தியை கமர்ஷியல் கதா நாயகனாக மாற்றியது.

ஆயிரத்தில் ஒருவன்: செல்வராகவன் இயக்கத்தில் வரலாற்றுப் படமாக உருவாக்கப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக பின்தங்கியது என்றுதான் கூறவேண்டும். பார்த்திபன், கார்த்திக் சினிமா வாழ்க்கையில் இந்த படம் பெரும் பங்கு வகித்தது. தமிழ் சினிமாவின் வரலாற்றில் மிக சிறந்த படங்களில் ஆயிரத்தில் ஒருவனும் இருப்பது செல்வராகவனுக்கு கிடைத்த பெருமை தான்.

மெட்ராஸ் : கார்த்தியின் திரைவாழ்க்கையில் முக்கியமாக இருந்த படம் மெட்ராஸ். பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான இப்படம் அரசியலை மையமாக வைத்த எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சாதாரண இளைஞனாக மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் கார்த்தி. மேலும் மெட்ராஸ் படம் சூப்பர் ஹிட்டானது.

தீரன் அதிகாரம் ஒன்று : எச் வினோத் இயக்கத்தில் தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் கார்த்தி நடித்திருந்தார். இப்படத்தில் கார்த்தி காவல்துறை அதிகாரியாக வீரமும், விவேகமும் நிறைந்தவராக நடித்திருந்தார். இப்படத்தில் இவருடைய நடிப்புக்கு பலரும் பாராட்டை தெரிவித்தனர். மேலும் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

கைதி : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்திக், நரேன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் கைதி. இப்படத்தில் சிறைக் கைதியாக கார்த்தி நடித்து இருந்தார். இப்படம் முழுக்க ஒரே இரவில் நடக்கும் சம்பவம் தான். ஹீரோயின், பாடல் என எதுவும் இல்லாத இப்படத்தில் திரைக்கதை மூலம் ரசிகர்களை பிரமிக்க வைத்து இருந்தார்.

Trending News