சொந்த பாட்டிபோல் நடிப்பில் மின்னிய 5 நடிகைகள்.. அந்த இடத்தை நிரப்ப போராடும் தமிழ் சினிமா

தமிழ் சினிமாவில் பாட்டி கதாபாத்திரத்திற்கு என்று சில நடிகைகள் உள்ளனர். அதாவது அந்த நடிகைகள் ஆரம்பத்தில் கதாநாயகி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் வயதான பிறகு பாட்டி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர். அவ்வாறு தமிழ் சினிமாவில் ஆட்சி செய்த 5 பாட்டி கதாபாத்திரத்தில் நடித்த நடிகைகளை பார்க்கலாம்.

மனோரமா : ரசிகர்களால் அன்போடு ஆட்சி என்று அழைக்கப்படும் மனோரமா கிட்டத்தட்ட 1500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் பாட்டி சொல்லை தட்டாதே படத்தில் பாட்டியாக நடித்து அசத்தியிருப்பார். மேலும் தாமிரபரணி, சாமி, சிங்கம் போன்ற பல படங்களில் ஹீரோ, ஹீரோயின்களுக்கு பாட்டியாக நடித்துள்ளார்.

காந்திமதி : தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 350 படங்களுக்கு மேல் நடித்தவர் நடிகை காந்திமதி. மண்வாசனை படத்தின் மூலம் காந்திமதி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். இவர் தவசி, ஐயா, விருமாண்டி போன்ற படங்களில் பாட்டி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சில சின்னத்திரை தொடர்களிலும் காந்திமதி நடித்திருந்தார்.

எஸ் என் லட்சுமி : 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை எஸ் என் லட்சுமி. இவர் மகாநதி, விருமாண்டி, வானத்தைப்போல, ரிதம், தேவர்மகன் போன்ற பல படங்களில் பாட்டி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடைசியாக சின்னத்திரையில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் துளசியின் பாட்டியாக நடித்து இருந்தார்.

சுகுமாரி : தன்னுடைய 10 வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வந்தவர் சுகுமாரி. இவர் மலையாள மொழியில் அதிக படங்கள் நடித்துள்ளார். சுகுமாரி பூவே உனக்காக படத்தில் விஜய்யின் பாட்டியாக நடித்து இருப்பார். மேலும் அலைபாயுதே, விண்ணுக்கும் மண்ணுக்கும், சினேகிதியே போன்ற படங்களில் சுகுமாரி நடித்துள்ளார்.

பரவை முனியம்மா : தூள் படத்தின் மூலம் பாடகியாகவும், நடிகையாகவும் அறிமுகமானவர் பரவை முனியம்மா. இவருடைய நாட்டுப்புற பாட்டுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பரவை முனியம்மா காதல் சடுகுடு, பூ, தேவதையைக் கண்டேன் என 25க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.