புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ஹீரோக்களுக்கு நிகராக கல்லாவை ரொப்பிய 5 பெண் ஹீரோயின்கள்.. அதிர்ஷ்ட நாயகியாக மாறிய குந்தவை

கடந்த வருடம் நிறைய ஹிட் படங்கள் வெளியே வெளியாகின. அதில் நிறைய சிறந்த படங்கள் ஆஸ்கர் வரை சென்று இருக்கிறது. அதே சமயம் முக்கியமான ஐந்து ஹீரோயின்கள் ஹீரோக்களுக்கு நிகராக தங்களுடைய வசூலை அள்ளி இருக்கின்றனர். இதில் ஒரு ஹீரோயின் எதிர்பார்க்காத அளவுக்கு வெற்றியும் அடைந்திருக்கிறார்.

பொன்னியின் செல்வன்: பொன்னியின் செல்வன் திரைப்படம் மல்டி ஸ்டார்ஸ் திரைப்படம் என்றாலும், இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய திருப்பி முனையை கண்டது நடிகை திரிஷா தான். இந்த படத்திற்கு முன்னால் வரைக்கும் த்ரிஷாவின் மார்க்கெட் அதல பாதாளத்தில் இருந்தது. ஆனால் இந்தப் படத்திற்குப் பிறகு திரிஷா முன்னணி ஹீரோயின் ஆகிவிட்டார். அடுத்த ஐந்து வருடத்திற்கு இவருடைய மார்க்கெட்டை ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லும் அளவிற்கு வாய்ப்புகள் குவிந்து விட்டன.

Also Read: திரிஷா அடுத்தடுத்து கமிட்டாகியுள்ள 5 படங்கள்.. 19 வருடத்திற்கு பின் மீண்டும் விஜய்யுடன் குந்தவை

கார்கி: இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்த திரைப்படம் தான் கார்கி. இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் விநியோகித்தது. தன் தந்தையின் மீதான வீண் பழியை நீக்கி அவரை நிரபராதி என நிரூபிக்க போராடும் நாயகியின் கதையாக இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது.

தலைவி: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் தலைவி. இந்த படத்தை இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கியிருந்தார். இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்திருந்தார். இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

Also Read: நடிகை படுத்தும் பாடு, பொன்னியின் செல்வன் 2 நடிக்க மறுக்கும் ஹீரோக்கள்.. ஆளை மாற்றும் மணிரத்தினம்

கட்டா குஸ்தி: இயக்குனர் செல்ல அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த திரைப்படம் தான் கட்டா குஸ்தி. ஏற்கனவே ஐஸ்வர்யா லட்சுமி ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்திருந்தாலும் முழுக்க முழுக்க கதாநாயகியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் இது.

யசோதா: நடிகை சமந்தா தனி கதாநாயகியாக நடித்த திரைப்படம் தான் யசோதா. இந்த படம் வாடகை தாய் மருத்துவத்தில் நடக்கும் ஊழல்களை மைய்யமாக கொண்டு எடுக்கப்பட்டது. ஒரு ஹீரோவுக்கு கிடைக்கும் வரவேற்பு சமந்தாவின் இந்த படத்திற்கு கிடைத்தது. இந்த படம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் சமந்தாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது.

Also Read: தரமான நடிகைக்கு தமிழ் சினிமாவில் ஏற்பட்ட பஞ்சம்.. நயன்தாரா முடிவால் திரிஷா காட்டில் வெளுத்து கட்டும் மழை

Trending News