புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மலை போல் காசை குவித்து வைத்திருக்கும் 5 டாப் ஹீரோயின்கள்.. 200 கோடியை தூக்கி எறிந்த சமந்தாவின் சொத்து மதிப்பு

Top 5 Heroines Net Worth: சினிமாவில் இருக்கும் நடிகைகள் முதலில் நுழைவதற்கு தான் கஷ்டப்படுவார்கள். ஆனால் என்ட்ரி கொடுத்து விட்டால் அடுத்தடுத்த படங்களில் கோடிகளில் சம்பளத்தை உயர்த்தி உச்சம் பெறுகிறார்கள். அப்படி மலை போல் காசை குவித்து வைத்திருக்கும் 5 கதாநாயகிகளின் சொத்து மதிப்பு தலை சுற்றம் வைக்கும் அளவுக்கு இருக்குது. அதிலும் சமந்தா தன்னிடம் நடிப்பு திறமை இருக்கு அதுவே போதும் என்று 200 கோடியை தூக்கி எறிந்திருக்கிறார்.

காஜல் அகர்வால்: பிசினஸ் ஃபேமிலியை சேர்ந்த இவர், தெலுங்கில் அறிமுகமாகி அதன் பின் தமிழில் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டவர். இவர் பெயரில் 150 கோடிக்கு சொத்துக்கள் இருக்குது. அதுவும் மும்பையில் மட்டும் நிறைய வீடுகள் உள்ளது. பிசினஸிலும் ஆர்வம் கொண்ட காஜல் சொந்தமாக பேபி ப்ராடக்ட்ஸ் கம்பெனியையும் வைத்து, நல்ல லாபம் பார்த்து இருக்கிறார்.

திரிஷா: 40 வயதிலும் திருமணம் செய்து கொள்ளாமல் இப்பவும் பேரழகியாக ஜொலித்துக் கொண்டிருக்கும் திரிஷா, இதுவரை 160 கோடிக்கு சொத்து சேர்த்து வைத்துள்ளார். அதிலும் 7 கோடியில் வீடும், 10 கோடியில் இன்னொரு வீடும் என எக்கச்சக்கமாக வச்சிருக்காங்க.

Also Read: என் செல்லத்த யாருடா அப்படி சொன்னது.? அமுல் பேபி போல் அடுத்த ரவுண்டுக்கு தயாரான சமந்தாவின் வைரல் புகைப்படம்

சமந்தா: சினிமா பேக்ரவுண்ட் இல்லாமல் படிப்படியாக முன்னேறிய நடிகைகளில் சமந்தாவும் ஒருவர். இவர் தென்னிந்திய முன்னணி நடிகையாக ரவுண்டு கட்டியதன் மூலம் 190 கோடிக்களை படங்களின் நடித்ததன் மூலம் சேர்த்து வைத்திருக்கிறார். அதிலும் இவரிடம் நிறைய ஆடம்பர கார்களும், ஹைதராபாத்தில் இருக்கும் ஜுப்ளி ஹில்ஸில்15 கோடிக்கு அப்பார்ட்மெண்டும் சொந்தமாக வைத்திருக்கிறார். சமந்தாவிடம் 10 கோடிக்கு கார் மட்டும் உள்ளது. அதிலும் மும்பையில் இவருக்கு ஏகப்பட்ட பிராப்பர்ட்டிஸ் இருக்குது.

இப்படி தன்னுடைய உழைப்பினால் உச்சம் பெற்ற சமந்தா நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு, அதன் பின் பிரிந்து விட்டார். விவாகரத்திற்கு பின் தன்னுடைய கணவர் வீட்டில் இருந்து ஜீவனாம்சமாக 200 கோடி, அவர் கேட்டிருந்தால் வந்திருக்கும். ஆனால் அது எதுவும் எனக்கு வேண்டாம். ஒரு நடிகையாக எனக்கு வேண்டியத நானே சம்பாதிப்பேன் என்று கெத்தா சொன்னார்.

Also Read: ஏ கிரேட் நடிகைகள் என பிரிக்கப்பட்ட 6 ஹீரோயின்.. நம்பர் ஒன் நடிகையை தூக்கி கடாசிய த்ரிஷா

தமன்னா: ரசிகர்களால் மில்க் பியூட்டி என செல்லமாக அழைக்கப்படும் தமன்னா, நடிகையாக இருந்தாலும் இவருடைய குடும்பம் ஒரு பிசினஸ் ஃபேமிலி. இவருடைய தந்தை டைமன் வியாபாரம் செய்து வருகிறார். சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடிய தமன்னா இதுவரை 200 கோடிக்கு சொத்துக்களை குவித்து வைத்திருக்கிறார். அதிலும் குறிப்பாக 80 ஆயிரம் ஸ்கொயர் ஃபீட்டில் 15 கோடி மதிப்பில் மும்பையில் பிரம்மாண்ட வீடும் இவருக்கு இருக்கு.

நயன்தாரா: லேடி சூப்பர் ஸ்டார் ஆக கோலிவுட்டை மட்டுமல்ல பாலிவுட் வரை கலக்கிக் கொண்டிருக்கும் நயன்தாரா, ஒட்டுமொத்தமாக 220 கோடி மதிப்பிலான சொத்துக்களை சேர்த்து வைத்திருக்கிறார். இவர் கடைசியாக நடித்த ஜவான் படத்திற்கு மட்டும் 10 கோடி சம்பளம் வாங்கினார். இவருக்கு ஹைதராபாத், கேரளா, சென்னை மற்றும் துபாய் போன்ற இடங்களில் ஏகப்பட்ட பிராப்பர்ட்டிஸ் இருக்கு. சொந்தமாகவே இவர் ப்ரைவேட் ஜெட் வாங்கி கெத்து காட்டுகிறார்.

Also Read: டாப் 10 நடிகைகளின் சொத்து மதிப்பு.. சமந்தாவை பின்னுக்கு தள்ளிய தமன்னா

Trending News