வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

குண்டாகி அவமானப்பட்ட 5 நடிகர்கள்.. தன்னைத்தானே செதுக்கிய அட்மேன் சிம்பு

சினிமாவை பொறுத்தமட்டிலும் நடிகர், நடிகைகளின் நடிப்பு திறமை எந்த அளவுக்கு பார்க்கப்படுகிறதோ அதே அளவுக்கு அவர்களது தோற்றத்தையும் படம் பார்ப்பவர்கள் கவனிப்பார்கள். தங்களுடைய தோற்றத்தை சிக்கென்று, இளமையோடு வைத்து கொள்ள நடிகர்கள் பெரிதும் மெனக்கெடுகிறார்கள். உடல் எடையை சற்று கவனிக்காமல் விட்டால் எடை கூடி அவர்கள் மார்க்கெட் இழப்பதோடு, நெட்டிசன்களாலும் பகிரங்கமாக அவமானத்தை சந்திக்கிறார்கள்.

சிலம்பரசன்: இளைஞர்களுக்கு யூத் ஐகானிக்காக இருந்தவர் தான் நடிகர் சிலம்பரசன். சில வருடங்களுக்கு முன் அதீத உடல் எடையுடன் காணப்பட்டார். இதனால் அவருக்கு மார்க்கெட் பறிபோனதோடு நிறைய அசிங்கத்தையும், அவமானத்தையும் சந்தித்தார். உடல் எடை கூடி போய் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போன சிம்பு ஒரே வருடத்தில் 30 கிலோ எடையை குறைத்து இப்போது படு மாஸாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

Also Read: சிம்பு அகராதியிலேயே முடியாது என நடிக்க மறுத்த காட்சி.. ஷாக்கில் இருந்து மீளாத கௌதம் மேனன்

அஜித்: நடிகர் அஜித் முதலில் நல்ல உடற்கட்டுடன் இருந்தாலும் பின்னாளில் ஒரு சில காரணங்களால் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை செய்த பின் அதீத உடல் எடை கூடி விட்டார். இதனால் இவர் நெட்டிசன்களால் பலமுறை ட்ரோல் செய்யப்பட்டு இருக்கிறார். பல சினிமா விமர்சகர்கள் கூட நடிகர் அஜித்தின் உடல் எடையை நாகரீகமற்ற முறையில் விமர்சனம் செய்திருக்கின்றனர்.

யோகிபாபு: நடிகர் யோகிபாபு துணை கதாபாத்திரங்களில் நடித்து முன்னணி காமெடியனாக மாறியவர். இவர் எவ்வளவு தான் பேரும், புகழும் அடைந்தாலும் இவருடைய உருவ தோற்றத்தை கேலி செய்யாதவர்கள் இல்லை. அந்த உருவ கேலியை தனக்கு பாசிட்டிவாக மாற்றி கொண்டு ஜெயித்திருக்கிறார் இவர். இப்போது காமெடியனை என்பதை தாண்டி ஹீரோவாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

Also Read: யோகி பாபுவின் மார்க்கெட்டை இறக்க நடக்கும் சதி.. பின்னால் இருந்து சைலண்டாக வேலை பார்க்கும் நடிகர்

நகுல்: 2003 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகர் நகுல். அந்த படத்திலேயே இவர் அதிகமாக உருவ கேலிக்கு ஆளாக்கப்பட்டார். அதன் பின்னரும் இவருடைய அதிக உடல் எடை காரணமாக பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தார். பின்னர் உடல் எடையை நன்றாக குறைத்து காதலில் விழுந்தேன் படம் மூலம் மாஸ் ஹீரோவாக மாறினார்.

சூர்யா: நடிகர் சூர்யா உடல் பருமனால் கேலி செய்யப்படவில்லை என்றாலும் அவருடைய உருவ தோற்றத்தினால் பயங்கர கிண்டலுக்குள்ளானார். நிறைய படங்கள் நடித்திருந்தாலும் இவர் மீதான உருவ கேலிகள் தொடர்ந்து கொண்டே இருந்தது. இதையெல்லாம் தாண்டி நடிகர் சூர்யா வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் சிக்ஸ் பேக் வைத்து எல்லோரையும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கினார்.

Also Read: உச்சகட்ட வளர்ச்சியால் ஆணவத்தில் ஆடும் யோகி பாபு.. விஷால், உதயநிதியை சேர்த்து அசிங்கப்படுத்திய மேடை

Trending News