சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

நடுநடுங்க வைத்த திரில்லரான டாப் 5 படங்கள்.. ரத்த வெறியும் தீராத கோபமும் கொண்ட சைக்கோ கில்லர்

Top 5 movies that are thrillers: பொதுவாக சினிமா என்றாலே பொழுது போக்குக்காகவும், மன நிம்மதிக்காகவும் தான் ஒரு காலத்தில் பார்த்து வந்தோம். ஆனால் அதுவே போகப் போக வித்தியாசமான கதைகளை கொடுத்து படத்தை பார்ப்பதினால் ஒரு நிம்மதி கிடைக்கிறது என்று தோன்ற வைத்து விட்டது. காலம்போக்கில் அந்த படங்கள் திகில் நிறைந்த சைக்கோ படங்களாகவும், அதை பார்த்தால் பயத்தில் நடுநடுங்க வைக்கும் காட்சிகளும் அதிகரித்துவிட்டது. அப்படி நடுநடுங்க வைத்து திரில்லரான படங்கள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் த்ரில்லர் மூவிஸ்

ஒரு கைதியின் டைரி: இப்படத்தில் கமல், அப்பா மற்றும் மகன் என இரண்டு கேரக்டரில் நடித்திருப்பார். சந்தர்ப்ப சூழ்நிலையால் ஜெயிலுக்குப் போகும் அப்பா கமல், சிறை தண்டனை முடிந்ததும் வெளியே வந்து தன் மனைவி இறப்பிற்கு காரணமான மூன்று நபர்களை கொலை செய்யும் விதமாக கொலவெறி உடன் அலைவார்.

அதே நேரத்தில் தன்னுடைய குடும்பத்தை பற்றி தெரியாத மகன் கமல், ஜனகராஜ் வளர்க்கப்பட்டு நேர்மையான போலீஸ் அதிகாரியாக வாழ்ந்து வருவார். இந்த நிலையில் அப்பா மற்றும் மகன் மோதிக் கொள்ளும் சூழ்நிலையை எதிர்நோக்கி படம் விறுவிறுப்பாக அமையும்.

சிகப்பு ரோஜாக்கள்: இப்படத்தில் எது ஞாபகம் இருக்கோ இல்லையோ கருப்பு பூனையை யாரும் மறந்திருக்க மாட்டோம். அந்த அளவிற்கு இப்படத்தில் கருப்பு பூனையால் பிரச்சனை மற்றும் யாரும் அறியாத சம்பவங்கள் நடுநடுங்க வைத்திருக்கும். பாரதிராஜா படைப்புகளில் மறக்க முடியாத படமாக சிகப்பு ரோஜாக்கள் வெற்றி பெற்றது.

அடுத்தடுத்து மர்மமாக நடக்கிற கொலைகளை வைத்து இதயத் துடிப்பை எகிற வைக்கும் விஷயங்களில் சைக்கோ கொலைகள் அதிகமாக காட்டி பதபதைக்க செய்யும். இளம் வயதில் பெண்களால் பாதிக்கப்பட்டு மனப்பிறழ்வுக்கு ஆளானவர், ஒவ்வொரு பெண்ணுடனும் பழகி, அவர்களைக் கொலை செய்து, புதைத்து, அதன் மீது ரோஜாச் செடிகளை நடுவது என்பது தமிழ் சினிமாவுக்குப் புதுசுதான். ரத்த வெறியும் பெண்கள் மீதான கோபமும் கொண்டு, கொன்று புதைத்து, ரோஜாச் செடியை நடும் ‘சிகப்பு ரோஜாக்கள்’, தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் த்ரில்லர். மிக முக்கியமான சைக்கோ கில்லர்.

குருதிப்புனல்: இப்படம் கமலின் மறக்க முடியாத படங்களில் வெற்றி பெற்ற படமாக கருதப்படுகிறது. இந்தத் திரைப்படத்தில் தான் தமிழில் முதன்முறையாக டால்பி ஒலிநுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு பயங்கரவாத குழுவை கண்டுபிடிக்கும் விதமாக புலனாய்வுத்துறை அதிகாரிகள் செயல்பட்டு வருவார்கள்.

அதன் வழியாக ஒவ்வொரு ஆபரேஷன்களும் ரகசியமாக ஆரம்பித்து பயங்கரவாத குழுவிற்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக கதைகள் ஒவ்வொன்றும் நகர்ந்து வரும். அதே நேரத்தில் காவல் துறையில் உள்ள கருப்பு ஆடு யார் என்று தெரியாமல் புலம்பிய நிலையில் இரண்டு தலை பாம்புகள் போல அர்ஜுன் மற்றும் கமல் விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருவார்கள். ஆனால் இதற்குள் பல மரணங்கள் ரத்த களரிகள் நிகழ்ந்து விடும்.

நூறாவது நாள்: மணிவண்ணன் இயக்கிய படங்களில் மிகவும் முக்கியமான படம் நூறாவது நாள். இதில் சமூகம், காதல், அரசியல், நகைச்சுவை, சஸ்பெண்ட் என பல ஜானகர்களில் கதைகள் நகரும். மர்மமான முறையில் தொடர்ந்து கொலைகள் நடப்பது காட்டி பார்ப்பவர்களை தொடை நடுங்க வைக்கும் விதமாக கனவின் மூலம் தெரிந்து கொண்டு அதை கண்டுபிடிக்கும் பரபரப்பான கிளைமாக்ஸ் உடன் படம் நகரும்.

மூடுபனி: முழுக்க முழுக்க ஒரு சைக்கோ படமாகவும், திகில் நிறைந்த காட்சிகளுடன் பாலு மகேந்திரா சோபாவை வைத்து இயக்கிய படம் தான் மூடுபனி. இப்படம் இப்பொழுது பார்த்தாலும் புல்லரிப்பை ஏற்படுத்தும் என்று சொல்வதற்கேற்ப காட்சிகள் அமைந்திருக்கும். சிறு வயதில் அம்மாவுக்கு ஏற்பட்ட கொடுமையை பார்த்து மனரீதியாக கலங்கி போயிருக்கும் சந்துரு, தொடர்ந்து மர்மமாக செய்யும் கொலைகளை மையப்படுத்தி இப்படம் அமைந்திருக்கும்.

Trending News