வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

வேல ராமமூர்த்தி வில்லனாக மிரட்டி விட்ட 5 படங்கள்.. கொம்பையா பாண்டியனாக பயமுறுத்திய கிடாரி பட நடிகர்

முன்னணி இயக்குனர்களுக்கு சவால் நிறைந்த கதைகளை திரைக்கதையாக எழுதிக் கொடுத்த பெருமைக்குரியவர் நடிகர் வேல ராமமூர்த்தி. இவர் எழுத்தாளராக மட்டுமல்லாமல் வில்லனாகவும் நடித்து மிரட்டினார். இதைத்தவிர வித்தியாசமான குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். அதிலும் கொம்பையா பாண்டியன் ஆக கிடாரி படத்தில் பலரையும் பயமுறுத்தினார். அவர் வில்லனாக நடித்த சிறந்த 5 படங்களின் லிஸ்ட் இதோ!

மதயானை கூட்டம்: 2013 ஆம் ஆண்டு விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் வெளியான மதயானை கூட்டம் படத்தில் கதாநாயகனாக கதிர் நடித்திருப்பார். இதில் வீரத்தேவர் என்ற கேரக்டரில் வேல ராமமூர்த்தி நடித்திருப்பார். இந்த படத்தில் இவருடைய வில்லத்தனமான பேச்சு மற்றும் செய்கைகள் படத்தை பார்ப்போரையே மிரள வைத்தது.

கிடாரி: 2016 ஆம் ஆண்டு சசி தயாரித்து நடித்த கிடாரி படத்தில் கொம்பையா பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் வேல ராமமூர்த்தி கச்சிதமாக பொருந்தி நடித்திருப்பார். இந்த படத்தில் இவருடைய வில்லத்தனம் படத்தை பார்ப்போரை பயமுறுத்தும் அளவிற்கு இருந்தது.

Also Read: சாப்பிடுவதற்கு என பெயர் போன 5 நடிகர்கள்.. குதிரைப்பால், எருமை தயிர் என வளைத்து கட்டும் நெப்போலியன்

நம்ம வீட்டு பிள்ளை: சிவகார்த்திகேயன் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் மணியக்காரர் என்ற கதாபாத்திரத்தில் வேலராமமூர்த்தி நடித்திருப்பார். இதில் சிவகார்த்திகேயனுக்கு பெரியப்பாவாக நடித்திருக்கும் வேலராமமூர்த்தி தன்னுடைய கேரக்டரில் சிறப்பாக நடித்திருப்பார்.

சேதுபதி: 2016 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சேதுபதி படத்தில் வாத்தியார் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி நடித்திருப்பார். இதில் அரசியல்வாதியாக இருந்த வேல ராமமூர்த்தி போலீசாக நடித்த விஜய் சேதுபதியை உருட்டிய உருட்டு படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

Also Read: தமிழ் சினிமாவில் வெற்றி கண்ட தரமான 5 துணை நடிகர்கள்.. ஹீரோவுக்கு நிகராக பாராட்டும் ரசிகர்கள்

புலிக்குத்தி பாண்டி: 2021 ஆம் ஆண்டு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு முத்தையா எழுதி இயக்கிய புலிக்குத்தி பாண்டி படத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள் இந்த படத்தில் சன்னாசி தேவர் என்ற கேரக்டரில் வேல ராமமூர்த்தி நடித்திருப்பார்.  இவரைத் தவிர வேறு யாரும் இந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது. அந்த அளவிற்கு தன்னுடைய அசத்தலான நடிப்பை வேல ராமமூர்த்தி வெளிப்படுத்தி இருப்பர்.

இவ்வாறு இந்த 5 படங்களிலும் வேல ராமமூர்த்தி வில்லனாக நடித்து மிரட்டி இருப்பார். இந்தப் படங்களில் எல்லாம் இவர் இல்லை என்றால் இந்த கதாபாத்திரமே இல்லை என்கின்ற அளவிற்கு தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிக்காட்டினார்.

Also Read: தியேட்டரில் மட்டுமல்ல ஓடிடி-யிலும் ஆதிக்கம் செலுத்தும் நடிகை.. 10 படங்களுடன் விஜய் சேதுபதிக்கே கொடுக்கும் டஃப்

Trending News