
2025 ஐபிஎல் போட்டிகள் நாளை முதல் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்தத் தொடர் மே 25ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இது நடக்கவிருக்கும் 18 ஆவது ஐபிஎல் போட்டியாகும். 2008 ஆம் ஆண்டிலிருந்து இந்தத் தொடர் நடந்து வருகிறது. சென்ற ஆண்டு கே கே ஆர் சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தத் தொடரில் இம்முறை அதிக தொகைக்கு ஏலம் போன 5 வீரர்கள். பெரிய பெரிய வீரர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு இந்த ஐந்து வீரர்களையும் பல கோடிகள் கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளனர். அப்படி முதல் ஐந்து இடத்தைப் பிடித்த வீரர்களின் பட்டியல் இதோ.
ரிஷப் பண்ட்: லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணிக்காக இவர் ஏலத்தில் எடுக்கப்பட்டார். இவர் தான் இந்த முறை அதிக தொகைக்கு, அதாவது 27 கோடிகள் கொடுத்து இவரை வாங்கியுள்ளது அந்த அணி. இந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோன்கா.
ஸ்ரேயாஸ் ஐயர்: கொல்கத்தா அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் இம்முறை 26.75 கோடிகளுக்கு பஞ்சாப் அணியினரால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இவர் அதிக தொகை கொடுத்து எடுக்கப்பட்டதில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
வெங்கடேஷ் ஐயர்:ஆல்ரவுண்டர் இடத்தில் இருக்கும் வெங்கடேஷ் ஐயர் கொல்கத்தா அணிக்காக விளையாடுகிறார்.இவர் இந்த முறை 23.75 கோடிகளுக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி எடுக்க போட்டி போட்டது.
அர்ஸ்தீப் சிங் மற்றும் சஹால்: இவர்கள் இருவரும் பஞ்சாப் அணியில் விளையாடுவதற்கு 18 கோடிகள் கொடுத்து ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். சமீப காலமாக இந்திய அணியில் அர்ஸ்தீப் சிங் செயல்பாடுகள் நன்றாக இருப்பதால் இந்த முறை இவ்வளவு தொகைக்கு ஏலம் போயிருக்கிறார்.