வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

நடிப்பு அவசியம் இல்ல, பிசினஸில் கல்லா கட்டும் 5 நடிகர்கள்.. கெஞ்சி கூப்பிட்டும் வராத நெப்போலியன்

நடிகர்கள் சிலர் மார்க்கெட் இருக்கும் காலங்களில் பேரும் புகழுடன் நன்றாக வாழ்ந்தாலும், அதன் பின்னர் என்ன ஆனார்கள் என்று கூட தெரியாமல் போய்விடுவார்கள். சில நடிகர்கள் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டத்தில் இருப்பார்கள். ஆனால் ஒரு சிலரே சம்பாதிக்கும் காலங்களிலேயே கிடைக்கும் பணத்தை முறையாக முதலீடு செய்து நன்றாக வாழ்கிறார்கள். டாப்பில் இருந்த ஒரு சில நடிகர்கள் மார்க்கெட் நன்றாக இருக்கும் போதே சினிமாவில் இருந்து ஒதுங்கி தொழில் தொடங்கி இருக்கிறார்கள்.

அப்பாஸ்: நடிகர் அப்பாஸ் மும்பையை பூர்வீகமாக கொண்டவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளில் நடித்து இருக்கிறார். இவர் தமிழில் காதல் வைரஸ், இனி எல்லாம் சுகமே, கண்ணெழுதி தொட்டும் பொட்டு, படையப்பா, மலபார் போலீஸ், விண்ணுக்கும் மண்ணுக்கும், ஆனந்தம், அழகிய தீயே போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது சினிமாவை விட்டு ஒதுங்கி பிசினஸ் பக்கம் சென்று விட்டார்.

Also Read: உயரத்தில் மட்டுமல்ல உள்ளத்திலும் உயர்ந்தவர்.. பழசை மறக்காமல் இன்று வரை நெப்போலியன் செய்யும் வேலை

நெப்போலியன்: நடிகர் நெப்போலியன் மீது இன்றளவும் தமிழ் ரசிகர்களுக்கு ஒரு கிரேஸ் இருக்கிறது. தசாவதாரம், விருமாண்டி, சுயம்வரம், தாயகம், கிழக்குச் சீமையிலே, புது நெல்லு புது நாத்து, சீவலப்பேரி பாண்டி போன்ற படங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நெப்போலியனுக்கு பல சினிமா வாய்ப்புகள் வந்தாலும் அதையெல்லாம் மறுத்து வருகிறார். இவர் அமெரிக்காவில் செட்டில் ஆகி சொந்த தொழில் செய்து வருகிறார்.

வினீத்: நடிகர் வினீத் தமிழ், மலையாளம், கன்னடம் , தெலுங்கு மொழிகளில் கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். பழம்பெரும் நடிகை, நாட்டிய பேரொளி பத்மினியின் நெருங்கிய உறவினர் ஆவார். இவர் தற்போது சினிமாவில் நடிக்காமல் சொந்தமாக நாட்டியபள்ளி வைத்து நடத்தி வருகிறார்.

Also Read: அமெரிக்காவில் செட்டிலான 5 தமிழ் நடிகர்கள்.. விடாமல் துரத்தி நடிக்க வைக்கும் உலகநாயகன்

கரண்: சிறு வயதிலிருந்தே சினிமா துறையில் இருப்பவர் நடிகர் கரண். இவர் உலக நாயகன் கமலஹாசனின் நம்மவர் படத்தில் கமலுக்கு வில்லனாக நடித்தார். வில்லனாக, சப்போர்டிங்க் ஆக்டராக பல படங்கள் நடித்திருந்த இவர் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சில் கதாநாயகன் அவதாரம் எடுத்தார். இப்போது சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறாரா.

ஹம்சவர்தன்: சினிமாவில் வெற்றி பெற மிகப்பெரிய முயற்சி எடுத்தவர் நடிகர் ஹம்சவர்தன். இவரது பல படங்கள் தோல்வியையே தழுவின. 2002 ஆம் ரிலீசான புன்னகை தேசம் படம் மட்டுமே இவர் நடித்ததில் வெற்றி பெற்றது. இந்த படத்தில் இவருடன் தருண், சினேகா, பிரீத்தா, குணால் ஆகியோ நடித்திருந்தனர். தற்போது இவர் தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கி மலேசியாவில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.

Also Read: வயிற்றில் உள்ள கருவையை கலைத்தார்.. நெப்போலியனை பார்த்து தெரிந்த ஓடிய பெண்

Trending News