வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

70, 80களில் கோடிகளை வசூலித்த முதல் 5 தமிழ் படங்கள்.. தலைகால் புரியாமல் ஹீரோக்கள் போட்ட ஆட்டம்

தற்போது வெளியாகும் படங்கள் அனைத்தும் கோடிகளில் வசூலை அசால்டாக வாரி குவித்தாலும் 70, 80களில் முதல் முதலாக தமிழ் சினிமா கோடியில் வசூலை பார்த்த முதல் 5 படங்கள் கோலிவுட்டை வியக்கவைத்தது. அதிலும் விக்ரம் படத்தின் மூலம் உலகநாயகன் வசூலில் மிரட்டி இருந்தாலும் அதற்கு முன்பே 80-களில் வெளியான அவருடைய படம் பாக்ஸ் ஆபீஸில் கோடிகளைக் குவித்தது.

உலகம் சுற்றும் வாலிபன்: 1973 ஆம் ஆண்டு எம்ஜிஆர் இயக்கி அவர் நடிப்பில் மிக பிரமாண்டமாக வெளியான திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபன். பல பிரச்சினைகளுக்கு இடையே இந்த படம் ரிலீஸ் ஆகி 1 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்த முதல் தமிழ் படம் என்ற பெருமையையும் பெற்றது.

திரிசூலம் : 1979ஆம் ஆண்டு சிவாஜியின் 200-வது படமான வெளியான இந்தப் படத்தில், சிவாஜி மூன்று வேடங்களில் நடித்திருக்கிறார். இதில் கேஆர் விஜயா, ஸ்ரீபிரியா, நம்பியார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்கள்.

இப்படத்தை சிவாஜி புரொடக்ஷன் தயாரித்திருந்தது. திரிசூலம் படம் கிட்டத்தட்ட 65 லட்சம் பட்ஜெட்டில் அப்போதைய காலகட்டத்தில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது. மேலும் இப்படம் 200 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது. அதிலும் திரிசூலம் படம் 8 திரையரங்குகளில் வெள்ளிவிழாவை கடந்தது. மொத்தமாக இப்படம் 3 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் மூலம்தான் சிவாஜி 3 ,4 தியேட்டர்கள் கட்டினார்.

Also Read: சிவாஜி நடித்ததிலேயே அதிக பட்ஜெட்டில் உருவான ஒரே திரைப்படம்.. பல கோடிகளை குவித்து செய்த பாக்ஸ் ஆபிஸ் சாதனை!

சகலகலா வல்லவன்: 1982 ஆம் ஆண்டு எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் கமல்ஹாசன், அம்பிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படம் வெளியாகி திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. சகலகலா வல்லவன் திரைப்படம் 3 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்து, சிவாஜியின் திரிசூலம் பட வசூலை முறியடித்தது.

முந்தானை முடிச்சு: 1983 ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கி நடித்திருக்கும் இந்த படத்தில், முதல் மனைவியை இழந்து கைக்குழந்தையுடன் இருக்கும் பாக்கியராஜ் இரண்டாவது திருமணம் ஊர்வசியை செய்து கொள்ள விரும்பாமல் ஒருகட்டத்தில் திருமணம் நடந்த பிறகு குழந்தைக்காக தன்னுடைய வாழ்க்கையை தியாகம் செய்யத் துணிந்த தந்தை படும்பாட்டை, பாக்கியராஜ் இந்தப்படத்தில் அழகாக காட்டியிருப்பார். பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்த இந்த படம் 4 கோடி வசூலைக் குவித்தது குறிப்பிடத்தக்கது.

Also Read: கைத்தட்டலை தாண்டி கண்ணீரை வர வழைத்த பாக்யராஜின் 5 படங்கள்.. மறக்க முடியாத அந்த 7 நாட்கள்!

அபூர்வ சகோதரர்கள்: 1989-ல் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமலஹாசன் மூன்று வேடங்களில் நடித்து வெளியான படம் அபூர்வ சகோதரர்கள். இந்தப் படத்தில் கமலஹாசன் பலரையும் நடிப்பால் வியக்கவைத்தது மட்டுமல்லாமல் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தார். இந்த படம் திரையரங்கில் தாறுமாறாக ஓடி சுமார் 10 கோடி வசூலை வாரி குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் மூலம் கமல்ஹாசன் கோடிகளில் புரண்டு, புதுப்புது விஷயங்களை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்தார்.

சமீபத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் 500 கோடியை எட்டிய நிலையில் அதற்கு முன்பே உலகநாயகன் நடிப்பில் வெளியான அபூர்வ சகோதரர்கள் படத்தில் அந்த காலத்திலேயே கோடிகளில் வசூலைக் குவித்து மாஸ் காட்டியிருக்கிறார்.

Also Read: 80-களில் கமலஹாசன் செய்த சாதனை.. இதுவரை யாராலும் முறியடிக்க முடியவில்லை

Trending News