வெள்ளிக்கிழமை, டிசம்பர் 20, 2024

டிவி சேனலில் இப்பவும் டிஆர்பி யில் அசைக்க முடியாத 5 படங்கள்.. ஜெயிலர், வாரிசுலாம் பின்னாடி தான் போல

Rajinikanth – Vijay: என்னதான் புது படங்களை தியேட்டரில் பார்த்தாலும் நல்ல நாளின் போது குடும்பத்தோடு சேர்ந்து டிவியில் பார்ப்பது ஒரு சந்தோஷம்தான் அந்த வகையில் ஒரு சில படங்கள் எப்போது டிவியில் போட்டாலும் நேயர்களால் அதிகமாக விரும்பி பார்க்கப்படும் இப்படி டிஆர்பி ரேட்டிங்கில் இன்று வரை அசைக்க முடியாத ஐந்து படங்களை பார்க்கலாம்

டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடத்தை பிடித்த படங்கள்

விசுவாசம்: நடிகர் அஜித் பல வருடங்களுக்குப் பிறகு நடித்த குடும்ப திரைப்படம் தான் விசுவாசம். அப்பா மற்றும் மகளுக்கு இடையே இருக்கும் அழகான உறவை சொன்ன இந்த படம் தியேட்டரில் ரசிகர்களால் அதிக அளவில் கொண்டாடப்பட்டது. இதுவரை சின்னத்திரையில் ஒளிபரப்பப்பட்ட படங்களிலேயே அதிக டிஆர்பி யில் முதலிடத்தில் இருப்பது இந்த படம் தான். இதன் டிஆர்பி ரேட்டிங் 18.14 ஆகும்.

பிச்சைக்காரன்: இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி எப்போதுமே வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். அவருடைய நடிப்பில் மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் பிச்சைக்காரன். இந்த படம் டிவியில் போடப்பட்ட போதும் டி ஆர் பி ரேட்டிங்கில் நல்ல மதிப்பை பெற்றது. பிச்சைக்காரன் படத்தின் டிஆர்பி ரேட்டிங் 17.69 ஆகும்.

Also Read:ரஜினியை பார்க்க கூட விரும்பாத விஜய்.. பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் பெருசாக்கும் தளபதி

அண்ணாத்தே: ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்களோடு உருவாகிய படம் அண்ணாத்தே. இந்த படம் தியேட்டர் ரிலீஸ் ஆகும் பொழுது கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் டிவியை பொறுத்த வரைக்கும் இன்றளவும் அசைக்க முடியாத ரேட்டிங்கை பெற்றிருக்கிறது. இந்த படத்தின் ரேட்டிங் 17.37 ஆகும்.

சர்க்கார்: முருகதாஸ் இயக்கத்தில் விஜய்க்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் சர்க்கார். படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன போது நிறைய எதிர்ப்புகளை சந்தித்தது. இருந்த போதிலும் இன்று வரை சின்னத்திரை டி ஆர் பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடத்தில் இருக்கிறது. சர்கார் படத்தின் டிஆர்பி ரேட்டிங் 16.9 ஆகும்.

சீமராஜா: நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது தான் சீமராஜா. சமந்தா, சூரி ஆகியோர் நடித்த இந்த படம் தியேட்டரில் வெற்றி பெறவில்லை. ஆனால் டிவியில் போடப்படும் போது பயங்கரமாக கொண்டாடப்பட்டது. சீமராஜா படத்தின் டிஆர்பி ரேட்டிங் 16.7.

இந்த வருட தீபாவளி டிவி நேயர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக அமைந்தது. வாரிசு மற்றும் ஜெயிலர் போன்ற நிறைய புத்தம் புதிய படங்கள் ஒளிபரப்பப்பட்டன.ஆனால் இந்த படங்கள் எதுவுமே மேற்கண்ட ஐந்து படங்களின் டிஆர்பி ரேட்டிகை தாண்டவில்லை. ஜெயிலர் படத்தின் டிஆர்பி ரேட்டிங் 15.59 , வாரிசு படத்தின் டிஆர்பி ரேட்டிங் 9.10 மற்றும் துணிவு படத்தின் டிஆர்பி ரேட்டிங் 2.24.

Also Read:ரஜினி கொளுத்திப் போட்ட அணுகுண்டு.. கொஞ்சம் கூட யோசிக்காமல் செய்த வேலை

Trending News