ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

தியேட்டரில் அலறவிட்ட 6 க்ரைம் த்ரில்லர் படங்கள்.. மெர்சல் செய்த இயக்குனர் கௌதம் மேனன்

தமிழ் சினிமாவில் க்ரைம் த்ரில்லர் படத்திற்கு என்றே தனி ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக தற்போது வெளியாகும் கிரைம் த்ரில்லர் படங்கள் ஹாலிவுட்டுக்கு நிகராக எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு தமிழில் வெளியான சிறந்த 6 க்ரைம் த்ரில்லர் படங்களை இப்போது பார்க்கலாம்.

காக்க காக்க : கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா, ஜீவன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் காக்க காக்க. இப்படத்தில் அன்புச்செல்வன் ஐபிஎஸ் ஆக இருக்கும் சூர்யா நடித்திருந்தார். இப்படம் என்கவுண்டர் போலீசுக்கும், அண்ணனை பறிகொடுத்த பிரபல ரவிக்கும் இடையே நடக்கும் மோதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது.

ராம் : அமீர் இயக்கத்தில் ஜீவா, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ராம். மகன் தனது அம்மாவை கொன்று விட்டதாக வரும் செய்தியை கேட்டு அதிர்ந்து போகும் காவல்துறையினர், அதன்பின் உண்மையான குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிக்கின்றனர்.

வேட்டையாடு விளையாடு : கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கமலஹாசன், ஜோதிகா, கமலினி முகர்ஜி, டேனியல் பாலாஜி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொடூரமாக கொலை செய்யும் சைக்கோ வில்லன்களை கமல் போலீஸ் அதிகாரியாக எப்படி துப்பறிகிறார் என்பதே இப்படத்தின் கதை.

யுத்தம் செய் : மிஷ்கின் இயக்கத்தில் சேரன், ஒய் ஜி மகேந்திரன், லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் யுத்தம் செய். இளம் பெண்களை பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகி கொடூரமாக ரசிக்கும் பணக்கார கும்பலை பழிவாங்கும் மற்றும் மகளை பறிகொடுத்த நடுதர வர்த்தகத்தின் கதைதான் யுத்தம் செய்.

துருவங்கள் பதினாறு : கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் துருவங்கள் பதினாறு. இப்படம் ஒரு தற்கொலை, ஒரு விபத்து மற்றும் ஒருவர் காணாமல் போன வழக்கு என இந்த மூன்றுக்கும் இடையே ஆன ஒற்றுமையை கருவாகக் கொண்டு உருவான கதைகளம் தான் துருவங்கள் பதினாறு.

விக்ரம் வேதா : மாதவன் மற்றும் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் விக்ரம் வேதா. இப்படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் விக்ரமுக்கும் 16 கொலைகள் செய்த தேவா இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் தர்ம மற்றும் அதர்ம யுத்தம் தான் விக்ரம் வேதா.

Trending News