வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பசுபதி நடிப்பில் மறக்க முடியாத 6 கதாபாத்திரங்கள்.. முருகேசனாய் கண்ணீர் விட வைத்த தியாகம்

கூத்துப்பட்டறையில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் நடிகர் பசுபதி. இவர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். ஆரம்பத்தில் கேமரா முன் நிற்கவே பயப்பட்ட இவர் வில்லன், நகைச்சுவை, குணச்சித்திரம், ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரம் என அனைத்திலும் தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார். அவ்வாறு பசுபதி நடிப்பில் வெளியான சிறந்த கதாபாத்திரங்களை பார்க்கலாம்.

விருமாண்டி : உலகநாயகன் கமலஹாசன், எழுதி, இயக்கி, நடித்து வெளியான படம் விருமாண்டி. இப்படத்தில் பசுபதி கொத்தாலத் தேவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் பசுபதி ஆயுள் தண்டனை கைதியாக காண்பிக்கபடுகிறார். மேலும் கொத்தனார் தேவன் பார்வையிலும் கொலை வழக்கு விசாரிக்கப்படுகிறது. இப்படத்தில் தனது அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் பசுபதி.

வெயில் : பரத், பசுபதி, பாவனா, ஸ்ரேயா ரெட்டி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் வெயில். இப்படத்தில் முருகேசன் ஆக பசுபதி நடித்திருந்தார். இப்படத்தில் சிறுவயதிலேயே வீட்டை விட்டு வெளியேறுகிறார் முருகேசன். பின்பு தியேட்டர் நடத்திவரும் முருகேசன் எதிரே வசிக்கும் தங்கம் என்ற பெண்ணை காதலிக்கிறார். பின்பு அந்தப் பெண் தற்கொலை செய்துகொள்ள, சொந்த ஊருக்கே 20 வருடம் கழித்து முருகேசன் வருகிறார். ஆனால் மீண்டும் தன் குடும்பம் தன்னை திருடன் ஆகவே பார்க்கிறது என குடும்பத்திற்காக சில தியாகங்கள் செய்கிறார்.

அரவான் : ஆதி, தன்ஷிகா, பசுபதி மற்றும் பலர் நடிப்பில் 2012ல் வெளியான திரைப்படம் அரவான். இப்படம் 18ஆம் நூற்றாண்டில் மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இப்படத்தில் பசுபதி கொம்பூதியாக நடித்து இருந்தார். மேலும் இப்படத்தில் பசுபதிக்கு வலிமையான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

கருப்பன் : விஜய் சேதுபதி, பசுபதி, பாபி சிம்ஹா, தன்யா ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் கருப்பன். இப்படத்தில் மாயியாக பசுபதி நடித்திருந்தார். இப்படத்தில் ஒரு வலிமையானவனுக்கு தன் தங்கையை திருமணம் கொடுக்கிறார் பசுபதி. ஆனால் சிலரது சூழ்ச்சியால் இவர்களது உறவு பிரிகிறது. மேலும் இவர்கள் எப்படி இணைகிறார்கள் என்பதே கருப்பன் படத்தின் கதை.

அசுரன் : வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர், பசுபதி மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் அசுரன். இப்படத்தில் தனுஷின் மைத்துனராக முருகேசன் கதாபாத்திரத்தில் பசுபதி நடித்திருந்தார். இப்படத்தில் கென் கருணாஸ் மற்றும் டீஜய் இவர்களின் பாசக்கார மாமனாக தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிக்காட்டி இருந்தார் பசுபதி.

சார்பட்டா பரம்பரை : பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, ஜான் விஜய், ஜான் கொக்கன், துஷாரா விஜயன், பசுபதி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இரண்டு பிரிவுகள் இடையே நடக்கும் குத்துச்சண்டை போட்டியை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது. இப்படத்தில் ரங்கன் வாத்தியாராக நடித்திருந்த பசுபதியின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

Trending News