தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு இணையான துணை கதாபாத்திரம் சில படங்களில் வலுவாக இருக்கும். அதனால் ஹீரோக்களை காட்டிலும் தங்களது நடிப்பு ஒரு படி மேலாக இருக்க வேண்டும் என அந்த நடிகர்கள் கடின உழைப்பை போடுகிறார்கள். அவ்வாறு நம்மை கவர்ந்த சிறந்த 6 துணை நடிகர்களை பார்க்கலாம்.
மணிகண்டன் : தமிழ் சினிமாவில் நடிகர், எழுத்தாளர், இயக்குனர் என பன்முக தன்மை கொண்டவர் கே மணிகண்டன். இவர் காதலும் கடந்து போகும், 8 தோட்டாக்கள், விக்ரம் வேதா, நெற்றிக்கண் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் ஜெய்பீம் படத்தில் இவர் நடித்த ராஜா கண்ணு கதாபாத்திரம் பலராலும் கவரப்பட்டது. மேலும் இதன் மூலம் நிறைய பாராட்டுகளும் இவரை வந்து சேர்ந்தது.

எம்எஸ் பாஸ்கர் : நடிகர் மற்றும் பின்னணி குரல் கொடுப்பவர் என அனைவராலும் அறியப்படுபவர் எம்எஸ் பாஸ்கர். இவருக்கு வயது 64, வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் 1987 லிருந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். கேடி, தசாவதாரம், உன்னைப்போல் ஒருவன், வேலாயுதம், எதற்கும் துணிந்தவன் என பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். பலகுரல் மன்னனாக சாதித்துக் காட்டி வருகிறார். தற்போது வெளிவந்துள்ள டாணாக்காரன் படத்தில் தனது எதார்த்தமான நடிப்பில் விருது வாங்கும் அளவிற்கு பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.
இளங்கோ குமாரவேல் : தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என நன்கு அறியப்படுபவர் இளங்கோ குமாரவேல். இவர் நகைச்சுவை மற்றும் சென்டிமென்ட் என இரண்டிலுமே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவார். இவர் அபியும் நானும், மதராசபட்டினம், பயணம் போன்ற படங்களில் துணை வேடங்களில் நடித்திருந்தார்.

காளி வெங்கட் : குறும் படங்களில் நடித்த அனுபவத்தை வைத்து தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் காளி வெங்கட். இவர் விஷ்ணு விஷாலின் முண்டாசுப்பட்டி மற்றும் அசோக் செல்வனின் தெகிடி திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்றார். தற்போதும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
ஜார்ஜ் மரியன் : நகைச்சுவை கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்றவர் நடிகர் ஜார்ஜ் மரியன். ஆனால் அவருடைய வித்தியாசமான பரிமாணத்தில் வெளியான திரைப்படம் கைதி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் போலீஸ் அதிகாரி நெப்போலியனாக அவர்களைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்று தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
குரு சோமசுந்தரம் : ஆரண்யகாண்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் குரு சோமசுந்தரம். இதைத்தொடர்ந்து பாண்டியநாடு, ஜிகர்தண்டா, ஜோக்கர் போன்ற படங்களில் நடித்திருந்தார். மேலும் ரஜினியின் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் மாவட்ட ஆட்சித்தலைவராக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் குரு சோமசுந்தரம்.
