சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

அப்பாவை பெருமைப்படுத்தி வெளியான 6 படங்கள்.. இப்பவும் கமல், சிவாஜியை அடிச்சுக்க ஆளில்லை

தமிழ் சினிமாவில் காதல், ஆக்ஷன், த்ரில்லர் என பல பரிமாணங்களைக் கொண்ட படங்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் அப்பா பாசத்தை அடிப்படையாக கொண்டு பல படங்கள் வெளியாகியுள்ளது. தந்தைக்கு இணையாக யாரும் இல்லை என்ற அளவிற்கு தந்தையை பெருமைப்படுத்தி வெளியான 6 படங்களை பார்க்கலாம்.

தேவர் மகன் : பரதன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரேவதி, கௌதமி, நாசர் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தேவர் மகன். இப்படத்தில் சிவாஜி கணேசன் பெரிய தேவராக நடித்திருந்தார். அவருடைய மகனாக சக்தி கதாபாத்திரத்தில் கமலஹாசன் நடித்து இருந்தார். இப்படத்தில் தந்தை, மகன் புரிதலை அழகாக வெளிக்காட்ட இருந்தது.

தவமாய் தவமிருந்து : சேரன் இயக்கத்தில் சேரன், பத்மப்ரியா, ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தவமாய் தவமிருந்து. இப்படம் மகனின் பிணைப்பு மற்றும் குடும்ப உறவுகளின் சிறப்பை வெளிக்காட்டி இருந்தது. இப்படத்தில் சேரன் பெற்றோருக்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்ட பின்பும் ராஜ்கிரண் பெருந்தன்மையுடன் நடந்துகொள்வார்.

இந்தியன் : ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் இந்தியன். இப்படத்தில் சுதந்திர போராட்ட தியாகி சேனாதிபதியாகவும், அவரது மகன் சந்துருவாகவும் கமல் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அதீத பாசம் உடைய மகன் குற்றம் செய்தாலும் தண்டிக்கப்படுவான் என்பதை இந்தியன் படம் வெளிக்காட்டி இருந்தது.

அப்பா : சமுத்திரக்கனி இயக்கத்தில் சமுத்திரகனி, தம்பி ராமையா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் அப்பா. தன் மகனின் திறமை அறிந்து அவன் விருப்பத்திற்கேற்ப அவனை வளர்க்க வேண்டும் என்பதை உணர்த்திய படம் அப்பா. இப்படத்தின் மூலம் குழந்தை வளர்ப்புக்கு பல நல்ல கருத்துகளை கூறி உள்ளார் சமுத்திரகனி.

தெறி : அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், நைனிகா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தெறி. இப்படத்தில் தன் குழந்தையை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்பதற்காக தன் அடையாளத்தை மாற்றிக் கொள்கிறார் விஜய்.
குழந்தைகளுக்கு செல்லம் கொடுத்து வளர்ப்பதை விட சமூக விழிப்புணர்வு, பொறுப்புணர்வுடன் வளர்க்க வேண்டும் என்ற கருத்தை வெளிக்காட்டிய படம் தெறி.

என்னை அறிந்தால் : கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித், அருண்விஜய், அனிகா, திரிஷா, அனுஷ்கா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் என்னை அறிந்தால். இப்படத்தில் தன் காதலியின் குழந்தைக்காக போலீஸ் வேலையை விட்டு செல்கிறார் அஜித். தந்தைப் பாசத்தை முழுமையாக வெளிக்காட்டிய படம் என்னை அறிந்தால்.

Trending News