ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2024

தமிழ் சினிமாவின் 6 பெரும் தலைகள் நடித்த ‘ஏ’ படம்.. நம்ப முடியாத சிவாஜியின் படம்

பொதுவாக தமிழ் சினிமாவை பொருத்தவரைக்கும் முன்னணி ஹீரோக்களாக இருப்பவர்கள் எப்போதுமே ஃபேமிலி ஆடியன்ஸ்கள் தங்களுடைய படத்திற்கு வர வேண்டும் என்று தான் அதிகமாக எதிர்பார்ப்பார்கள். இதனாலேயே தாங்கள் நடிக்கும் காட்சிகளில் முகம் சுளிக்கிற மாதிரி எதுவும் இருந்துவிடக் கூடாது என பார்த்து பார்த்து நடிப்பார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் ஆறு முன்னணி ஹீரோக்கள் தங்களுடைய ஆரம்ப காலங்களில் ஏ கண்டன்ட் படங்களில் நடித்திருக்கிறார்கள்.

மர்மயோகி: தமிழ் சினிமாவில் முதன் முதலில் ஒரு படத்திற்கு ஏ சான்றிதழ் தணிக்கை குழுவால் வழங்கப்பட்டது என்றால் அது மக்கள் திலகம் எம்ஜிஆர் இன் மர்மயோகி திரைப்படம் தான். இந்த படத்தில் நடன மங்கையாக வரும் ஒரு பெண் அரசனை தன் கைவசப்படுத்தி அவனே திருமணம் செய்து கொண்டு நாட்டை ஆள்வது போல் கதை அம்சம் இருக்கும். மேலும் அந்த அரசன் இறந்த பிறகு ஆவியாக வருவது போலவும் இருப்பதால் இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது.

Also Read:காதல் மனைவிக்கு வைத்த சம்பள பாக்கி.. கமலை பிரிய அடுக்கடுக்காக 3 முக்கிய காரணங்களை சொன்ன கெளதமி

கவரிமான்: 1979 ஆம் ஆண்டு இயக்குனர் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்த படம் கவரிமான். திருமண உறவுக்கு புறம்பான காதலை மையமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. தன் மனைவி தவறு செய்வதே கண் முன்னே பார்த்துவிடும் ஹீரோ அவளை கொலை செய்வது போல் இந்த படத்தின் கதை நகர்வதால் இதற்கு ஏர சான்றிதழ் அளிக்கப்பட்டது.

நெற்றிக்கண்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு வித்தியாசமான நெகட்டிவ் ரோலில் நடித்த திரைப்படம் நெற்றிக்கண். பார்க்கும் பெண்கள் மீதெல்லாம் ஆசைப்படும் அப்பாவாகவும், தவறான பாதையில் செல்லும் தந்தையை திருத்தும் மகனாகவும் இரண்டு கேரக்டரில் ரஜினிகாந்த் இந்த படத்தில் நடித்திருப்பார். அப்பாவின் கேரக்டரை பற்றி சொல்வதற்காக எடுக்கப்பட்ட காட்சிகளினால் இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஒரு கைதியின் டைரி: பாரதிராஜா இயக்கத்தில் கமலஹாசன் மற்றும் ராதா நடித்த திரைப்படம் ஒரு கைதியின் டைரி. இந்த படத்தைப் போலவே சிகப்பு ரோஜாக்கள், விஸ்வரூபம் போன்ற படங்களிலும் காட்சிகள் ஏ கன்டென்ட் காட்சிகள் அதிகமாக இருக்கும்.

Also Read:ஜெயலலிதாவை கழட்டி விட்ட எம்ஜிஆர்.. பிரிவுக்கு காரணமாக இருந்த இரண்டு நடிகைகள்

வாலி: இயக்குனர் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான படம் வாலி. இதில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். தான் காதலித்த பெண் தன்னுடைய தம்பியை காதலித்து அவனுக்கு மனைவியாக பிறகும் அவள் மீது ஆசைப்படும் நெகட்டிவ் ரோலில் நிறைய காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

ரசிகன்: தளபதி விஜய்யின் ஆரம்ப கால படங்களில் காதல் காட்சிகள் கொஞ்சம் அதிகமாகவே எல்லை மீறப்பட்டிருக்கும். அந்த காலத்தில் இதனால் அவர் மீது விமர்சனங்களும் இருந்தது. ரசிகன் திரைப்படம் மட்டுமல்லாமல் தேவா, மாண்புமிகு மாணவன் போன்ற படங்களிலும் இதுபோன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

Also Read:ரஜினிக்கு தங்கச்சியாகவும், காதலியாகவும் நடித்த 5 நடிகைகள்.. நெற்றிக்கண் சக்ரவர்த்தியை தெறிக்கவிட்ட சரிதா

- Advertisement -spot_img

Trending News