வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

டாப்பு குக்கு டூப்பு குக்கில் அவஸ்தைப்படும் வெங்கட் பட்.. அந்தர்பல்டி அடித்த செஃப் தாமு

Top Cooku Dupe Cooku: ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு சந்தோஷம் என்று சொல்வதற்கேற்ப விஜய் டிவி மற்றும் மீடியா மேஷனுக்கு ஏற்பட்ட பிரச்சினையால் சன் டிவி குளிர் காய்ந்து விட்டது. அதாவது பல வருடங்களாக விஜய் டிவியில் புதுமையான ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி வெற்றிகரமாக கொடுத்தது மீடியா மேஷன். தற்போது இரண்டு பேருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் மீடியா மேஷனிடம் நைசாக பேசி சன் டிவி பக்கம் இழுத்துக் கொண்டது.

அந்த வகையில் மீடியா மேசன், தான் புதுசாக எடுத்து வைக்கும் சேனலுக்கு வெற்றியை கொடுக்க வேண்டும் என்று செஃப் வெங்கட் பட்-யிடம் பேச்சுவார்த்தை செய்து இருக்கிறார்கள். அவரும் 20 வருடத்திற்கு மேல் இருந்த பழக்கத்தினால் மீடியா மேஷனுக்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக கூப்பிட்டதும் சன் டிவிக்கு சம்மதம் தெரிவித்து விட்டார்.

தாமுவை நம்பி மோசம் போன வெங்கட் பட்

இவரை தொடர்ந்து செஃப் தாமு சொன்னது என்னவென்றால் வெங்கடேஷ் எங்கே நிகழ்ச்சி பண்ணுகிறாரோ அதே இடத்திற்கு நானும் வந்து விடுவேன் என்று சொல்லி இருக்கிறார். அந்த வகையில் இவர்கள் இருவரையும் வைத்து சன் டிவியில் பிரமாதமாக நிகழ்ச்சியை ரெடி பண்ணிவிடலாம் என்று பிளான் பண்ணி விட்டார்கள். ஆனால் விஜய் டிவி இவர்கள் இருவரிடமும் பேரம் பேசி இருக்கிறார்கள்.

அதற்கு வெங்கட் பட் நன்றி கடனுக்காக நான் அவர்கள் பக்கம் தான் இருப்பேன் என்று மீடியா மேஷனுக்கு சப்போர்ட் பண்ணி விட்டார். ஆனால் தாமுவிடம் விஜய் டிவி பேசின பிறகு உடனே சன் டிவிக்கு வருவதற்கு மறுப்பு தெரிவித்து விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போய்விட்டார். இதனால் எந்தவித சலிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக விஜய் டிவி புது புது யுக்திகளை பாலோ பண்ணி குக் வித் கோமாளியை ஒளிபரப்பு செய்கிறார்கள்.

அதே மாதிரி சன் டிவியில் வெங்கட் பட்-க்கு ஜோடியாக தாமுவை தவிர வேறு யாரு வந்தாலும் அது செட்டாகாது என்பதற்காக ஒன் மேன் ஆர்மியாகவே தொகுத்து வழங்க சொல்லி விட்டார். இதனால் கடந்த வரம் ஆரம்பித்த டாப் குக்கு டுபு குக்கு நிகழ்ச்சியில் என்ன தான் புதுப்புது ட்ரிக்ஸ்களை பாலோ பண்ணி வந்தாலும் வெங்கட் பட் தனியாக என்டர்டைன்மென்ட் பண்ணுவதால் தொண்டை கட்டும் அளவிற்கு அவஸ்தை பட்டு நடத்தி இருக்கிறார்.

ஏனென்றால் இவர் பண்ணும் என்டர்டைன்மென்ட் தவிர மற்ற கோமாளிகள் குக்குகள் யாரும் பெருசாக மக்களை கவரவில்லை என்றே சொல்லலாம். ஆனாலும் வெங்கட் பட் விஜய் டிவியில் வாங்கின சம்பளத்தை விட சன் டிவியில் மிகவும் கம்மியாக தான் வாங்குகிறேன் என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதற்கு காரணம் விஜய் டிவியில் சனி மற்றும் ஞாயிறு என வாரத்திற்கு இரண்டு எபிசோடுகள் ஆரம்பித்து கிட்டத்தட்ட 20 வரை போவதால் அதற்கான சம்பளம் அதிகமாக கிடைக்கும்.

ஆனால் சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் தான் நிகழ்ச்சி நடைபெறுவதால் அதற்கான சம்பளமாக கம்மியாக தான் வாங்குவதாக கூறி இருக்கிறார். என்னதான் சம்பளத்தின் அடிப்படையில் வெங்கட் பட் கம்மியாக வாங்கி இருந்தாலும் ஸ்பான்சர் மூலமாக கிடைக்கும் லாபம் எக்கச்சக்கமாக இருக்க தான் செய்யும்.

இருந்தாலும் இரு துருவங்களாக தற்போது வெங்கட் பட் மற்றும் தாமு பிரிந்ததால் இரண்டு நிகழ்ச்சிகளுமே பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இல்லை என்று மக்கள் அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

சன் டிவியில் இணைந்த வெங்கட் பட் பற்றிய விவரங்கள்

Trending News