திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

டாப் இயக்குனர்களை வளர்த்துவிட்ட குருக்கள்.. கமல்ஹாசனிடம் வேலை செய்த ஜெயம் ரவி

இப்போது இருக்கும் டாப் இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் தங்களுடைய ஆரம்ப காலத்தில் யாரவது ஒரு இயக்குனரிடம் அசிஸ்டண்டாக இருந்தவர்களாக தான் இருப்பார்கள். இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் வந்தவர்கள் இப்போது டாப் நடிகராகவும் இருக்கிறார்கள். நடிப்பை தேடி வந்தவர்கள் படங்களை இயக்கி கொண்டும் இருக்கிறார்கள்.

பாக்யராஜ்: பாக்யராஜ் திரைக்கதைகள் ஜாம்பவான் என்று அழைக்கப்படுபவர். கமல், ரஜினியெல்லாம் மாஸ் காட்டி வளர்ந்து கொண்டிருந்த காலங்களில் பெண்களின் சென்டிமென்டை வைத்தே வெள்ளி விழா படங்களை கொடுத்தவர். இவர் முதலில் 16 வயதினிலே படத்தில் இயக்குனர் பாரதிராஜாவுக்கு அசிஸ்டெண்டாக இருந்தவர். அதன் பின்னர் கிழக்கே போகும் ரெயில் படத்திலும் உதவி இயக்குனராக இருந்த பாக்யராஜை, இயக்குனர் இமயம் பாரதிராஜா புதிய வார்ப்புகள் மூலம் கதாநாயகன் ஆக்கினார்.

Also Read: வாலியை கோவம் வர காக்க வைத்த பாக்கியராஜ்.. பொறுமையை சோதிப்பதில் காரணம் இருக்கு

சமுத்திரக்கனி: இயக்குனர் சமுத்திரக்கனி உன்னை சரணடைந்தேன் மற்றும் கேப்டன் விஜயகாந்தை வைத்து நெறஞ்ச மனசு போன்ற படங்களை இயக்கி இருக்கிறாரா. சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்பட்ட இவர் இயக்குனர் சிகரம் பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக பார்த்தாலே பரவசம் படத்தில் பணிபுரிந்தார்.

சசிகுமார்: சசிகுமார் சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இயக்குனராக வந்த இவரை நாடோடிகள், சுந்தர பாண்டியன், வெற்றிவேல் போன்ற படங்கள் கோலிவுட்டின் ஹீரோ ஆகின. சசிகுமார் இயக்குனர் அமீரின் அசிஸ்டண்டாக மௌனம் பேசியதே படத்தில் பணியாற்றி இருக்கிறார்.

Also Read: கழுத்தை நெறிக்கும் கடன்.. அதல பாதாளத்தில் தவிக்கும் சசிகுமார்

ஜெயம் ரவி: தான் நடித்த ஜெயம் படத்தின் மூலமாக ஜெயம் ரவி என இவர் அறியப்படுகிறார். இல்லாமை துள்ளும் நடிப்பில் ரசிகர்களை கட்டி போட்டு வைத்திருக்கும் இவர் இப்போது பொன்னியின் செல்வன் படத்தில் ராஜ ராஜ சோழனாக நடித்திருக்கிறார். இவர் கமலின் நடிப்பில் வெளியான ஆளவந்தான் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார்.

கார்த்தி: நடிகர் சிவகுமாரின் மகன், சூர்யாவின் தம்பி என்பதை தாண்டி கார்த்தி கோலிவுட்டில் தனக்கான ஒரு அங்கீகாரத்தை பெற்று விட்டார். MGR முதல் ரஜினி வரை ஆசைப்பட்ட வந்தியத்தேவன் கேரக்டரில் இப்போது பொன்னியின் செல்வனில் நடித்திருக்கிறார். தன்னுடைய முதல் படமான பருத்தி வீரனிலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய கார்த்தி, இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய ஆயுத எழுத்து படத்தின் அசிஸ்டன்ட் டைரக்டர் ஆவார்.

சித்தார்த்: தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரையுலக பெண் ரசிகைகளின் சாக்லேட் பாயாக வலம் வரும் சித்தார்த் ஒளிப்பதிவாளர் PC ஸ்ரீராம் மூலமாக மணிரத்தினத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்தார். பின்னர் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வெளியான பாய்ஸ் படம் மூலமாக கதாநாயகனானார்.

Also Read: திருமணம் வரை சென்று 3 நடிகைகளை கழட்டிவிட்ட சித்தார்த்.. நான்காவதாக சிக்கிய அமுல் பேபி

Trending News