வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

நட்புக்காக ஒரு பைசா கூட வாங்காமல் நடித்த 5 நடிகர்கள்.. ஆண்டவருக்காக வில்லனாக மாறிய சூர்யா

பொதுவாக முன்னணி நடிகர்கள் ஒரு படத்தில் நடிப்பதற்கு பெரிய அளவில் சம்பளத்தை டிமான்ட் செய்து வருவார்கள். அப்படிப்பட்ட நடிகர்களுக்கு மத்தியில் நட்புக்காக ஒரு பைசா கூட வாங்காமல் சில படங்களில் முன்னணி நடிகர்கள் நடித்துக் கொடுத்துள்ளனர். அந்த வரிசையில் ஐந்து நடிகர்கள் நடித்த படங்களை பற்றி பார்க்கலாம்.

“இங்கிலீஷ் விங்கிலீஷ்” அஜித்: 2012 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் ஸ்ரீதேவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் கெஸ்ட் ரோல்காக அஜித் நடித்துக் கொடுத்திருப்பார். இது அஜித் முழுக்க முழுக்க ஸ்ரீதேவியின் நட்பிற்காக நடித்துக் கொடுத்தார். இதை தவிர அவர் இந்த படத்திற்காக சம்பளம் எதுவும் வாங்கவில்லை. இந்தப் படம் குறைந்த பட்ஜெட்டில் ஆரம்பித்து அதிக அளவில் லாபத்தை கொடுத்தது.

Also read: 4 மாதங்கள் கெடு கொடுத்த அஜித்.. செய்வதறியாமல் முழிக்கும் இயக்குனர்

“செந்தூரபாண்டி” விஜயகாந்த்: எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் காதலை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்தில் விஜயகாந்த், விஜய், கௌதமி மற்றும் யுவராணி ஆகியோர் நடித்திருந்தார்கள். இந்தப் படத்திற்கு முன் விஜய்யின் முதல் படமான நாளைய தீர்ப்பு எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.

இதனால் விஜய்க்கு அடுத்த படத்தை வெற்றியடைய செய்வதற்காக விஜயகாந்திடம், எஸ்ஏ சந்திரசேகர் உதவி கேட்டுள்ளார். அன்றைய காலத்தில் மிக உச்ச நடிகராக இருந்த விஜயகாந்த் எந்த ஒரு யோசனையும் இன்றி நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார். மேலும் அவர் தனக்காக எந்த ஒரு சம்பளமும் எதிர்பார்க்காமல் எஸ்ஏ சந்திரசேகர்காக இந்த படத்தில் நடித்துக் கொடுத்தார்.

Also read: வசூலை வாரிக்குவித்த கேப்டனின் 6 படங்கள்.. தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த சேதுபதி IPS

“நாய் சேகர் ரிட்டன்ஸ்” பிரபுதேவா: ஆரம்பக் காலத்தில் வடிவேலும், பிரபுதேவாவும் நடித்த படங்களின் மூலம் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் வடிவேலுக்காக பான் இந்திய அளவில் பேமஸ் ஆக இருக்கக்கூடிய பிரபுதேவா சம்பளமே வாங்காமல் கொரியோகிராபர் செய்திருக்கிறார். இதற்காக பிரபுதேவாவிடம் கேட்ட பொழுது வடிவேல் படத்தில் நான் இல்லாமல் எப்படி என்று நட்பின் ரீதியாக செய்து கொடுத்திருக்கிறார்.

“ஹேராம்” ஷாருக்கான்: 2000ஆம் ஆண்டு வெளியான ஹேராம் படத்தை கமலஹாசன் இயக்கி அதில் கதாநாயகனாக நடித்திருப்பார். இந்த படத்தில் ஷாருக்கான் முக்கிய வேடத்தில் நடித்தார். ஆனால் இந்தப் படத்தில் அவர் ஒரு பைசா கூட வாங்காமல் கமலஹாசனின் நட்பு ரீதியான பழக்கத்தினால் மட்டுமே நடித்துக் கொடுத்தார். இந்தப் படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது.

“விக்ரம்” சூர்யா: விக்ரம் படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்காக சம்பளம் இல்லாமல் வில்லன் கதாபாத்திரத்தில் சூர்யா ரோலக்ஸ் ஆக மாறி இருப்பார். இது முழுக்க முழுக்க கமலஹாசன் மேலிருந்த மரியாதைக்காக மட்டுமே நடிக்க சம்மதித்து இருக்கிறார். இப்படி நடித்த இவர் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்ப பார்க்கும் வகையில் இவரது வில்லத்தனமான நடிப்பு மிக பிரம்மாண்டமாக பேசப்பட்டு வருகிறது. இந்த கதாபாத்திரத்தில் இவரை தவிர வேற யாரு நடித்தாலும் சூட்டாகாது என்ற அளவுக்கு நடித்திருக்கிறார்.

Also read: அக்கட தேசத்து ஹீரோவுடன் கூட்டணி போடும் வெற்றிமாறன்.. பாலாவை போல் சூர்யாவை கழட்டிவிட்ட சோகம்

Trending News