கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விக்ரம். விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் பலர் நடித்துள்ளனர். ஜூன் மூன்றாம் தேதி ரிலீஸான விக்ரம் திரைப்படம் சர்வதேச அளவில் 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்து வருகிறது.
ரிலீஸ் ஆன நாள் முதல் இன்று வரை எந்த நெகட்டிவ் கமெண்ட் களையும் பெறாமல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடம்பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகிறது. கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தை பற்றி தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதாவது, ‘விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பு அருமையானது. அனிருத் இசை சிறப்பாக அமைந்துள்ளது எனக் கூறியுள்ளார். பின்பு லெஜெண்ட் கமல்ஹாசன் நடிப்பில் பற்றி பேச எனக்கு தகுதி இல்லை. உங்கள் ரசிகனாக நான் சொல்கிறேன். இது ஒரு பெருமையான தருணம்’ என மகேஷ் பாபு, விக்ரம் படத்தை குறித்த மனம் திறந்து பேசியுள்ளார்.
மேலும் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் உருவானதை பற்றி லோகேஷ் கனகராஜ் இடம் கேட்க இருப்பதாகவும் கூறியுள்ளார். கண்டிப்பாக இப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறும். லோகேஷ் கனகராஜ் அவர்கள் மிகப்பெரிய வெற்றி படங்களை இனி வரும் நாட்களில் கொடுப்பார் என மகேஷ்பாபு லோகேஷ் கனகராஜ் குறித்து ட்விட் செய்திருக்கிறார்.
இப்படிகமலைப் பற்றியும் லோகேஷ் கனகராஜ் பற்றியும் அந்தப் படத்தில் நடித்த பகத் பாசில், விஜய்சேதுபதி பற்றியும் வரிசையாக இரண்டு ட்விட்டர் பதிவுகளை வெளிவிட்ட மகேஷ்பாபு, சூர்யா நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தை பற்றி எதுவும் சொல்லவே இல்லை. சில நிமிடங்கள் மட்டுமே ரோலக்ஸ் கதாபாத்திரம் விக்ரம் படத்தில் வந்திருந்தாலும் சூர்யாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அப்படியிருக்கும்போது அவரைப் பற்றி ஏன் குறிப்பிடவில்லை என மகேஷ்பாபுவுக்கு சோசியல் மீடியாவில் சூர்யாவின் ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதன்பிறகு மகேஷ்பாபுவின் ரசிகர்கள் அதற்கு மன்னிப்பு கேட்டது மட்டுமின்றி சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு நாங்கள் அனைவரும் ரசிகர்கள் என கமெண்ட் செய்துள்ளனர்.