வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

ஒரே நேரத்தில் 3 மாஸ் படங்கள்.. ட்ரெண்டிங் ஹீரோயின்களை ஓரம் கட்டிய திரிஷா

Trisha: இப்போ ட்ரெண்டிங்கில் இருக்கும் நடிகைகளை ஓரம்கட்டி விட்டு டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார் திரிஷா. இன்றும் இளமை மாறா பொலிவுடன் இருக்கும் திரிஷா பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்திருந்தார்.

ஒருபுறம் உமன் சென்ட்ரிக் படங்களை தேர்ந்தெடுத்து நடித்துவரும் த்ரிஷா மற்றொருபுறம் மாஸ் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு அசத்தி வருகிறார். அதுவும் ஒரே சமயத்தில் மூன்று நான்கு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து சாதுரியமாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் மகிழ் திருமேனி, அஜித் கூட்டணியில் உருவாகும் விடாமுயற்சி படத்தில் திரிஷா தான் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஏற்கனவே அஜித், திரிஷா காம்போ பட்டையை கிளப்பிய நிலையில் இந்த படத்திலும் இவர்களது கெமிஸ்ட்ரியை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

த்ரிஷா கைவசம் இருக்கும் 3 மாஸ் படங்கள்

அதோடு அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கும் வகையில் அஜித்தின் அடுத்த படமான குட் பேட் அக்லி படத்திலும் திரிஷா தான் ஹீரோயினாம். ஆதிக் ரவிச்சந்திரன் கால்ஷீட் கேட்டவுடன் உடனே ஓகே சொல்லி விட்டாராம் திரிஷா. மற்றுமொரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

அதாவது அஜித்துடன் தொடர்ந்து எப்படி இரண்டு படங்களில் த்ரிஷா நடிக்கிறாரோ அதேபோல் விஜய்யுடனும் நடிக்கிறார். விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ படத்தில் திரிஷா தான் கதாநாயகி. இப்போது வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் கோட் படம் உருவாகி இருக்கிறது.

இந்த படத்தில் திரிஷா நடிக்கவில்லை என்றாலும் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு மலையாளத்தில் ஐடென்டிபை என்ற படத்தில் திரிஷா நடித்து இருக்கிறார். இவ்வாறு மூன்று மாஸ் படங்கள் திரிஷா கைவசம் இருக்கிறது.

எவர்கிரீன் நடிகையாக வலம் வரும் திரிஷா

Trending News