
பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான புதுப்புது அர்த்தங்கள் படத்தின் மூலம் நடன இயக்குனராக அறிமுகமானவர் அந்த பிரபலம். அதன் பிறகு கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி போன்ற பழமொழிகளில் பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் முக்கியமான நடன இயக்குனர்களில் ஒருவராக திகழ்கிறார் கலா மாஸ்டர். அதுமட்டுமல்லாமல் சின்னத்திரையில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியின் நடுவராகவும் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் விக்னேஷ் சிவனின் காத்துவாக்குல 2 படத்தில் கலா மாஸ்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தியஒரு பேட்டி ஒன்றில் கலா மாஸ்டர் திரைப்படங்களில் நடிகர், நடிகைகளுக்கு நடனம் சொல்லித் தரும் பொழுது ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் சிக்கல்களைப் பற்றி கூறினார். அதில் கலா மாஸ்டர் ஆல் மறக்க முடியாத ஒரு பாடலைப் பற்றி பகிர்ந்துள்ளார். திரிஷா, ஷாம் நடிப்பில் வெளியான திரைப்படம் லேசா லேசா.
இப்படம் ஒரு வருடத்திற்கு மேலாக எடுக்கப்பட்டது. இப்படத்தில் இடம்பெற்ற லேசா லேசா பாடலை கலா மாஸ்டர் கோரியோகிராபி செய்துள்ளார். இந்தப் பாடலில் ஒரு சின்ன மும்மண்ட் ஸ்பெண்ட் பண்ணி ஏலனும் போன்ற சீன் வைக்கப்பட்டிருந்தது. முதலில் அந்த காட்சி திரிஷாவுக்கு வரவில்லை.
இதனால் கோபப்பட்ட கலா மாஸ்டர் சூட்டிங்கை உடனே முடிக்க வேண்டும் இப்படி பண்ணா எப்படி என்று கோபமாக திட்டி உள்ளார். உடனே கோபப்பட்டு திரிஷா மேக்கப் ரூமுக்கு சென்று எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை நான் என் அப்பா இருக்கும் லண்டனுக்கு போகிறேன் என கூறியுள்ளார்.
உடனே கலா மாஸ்டர் என்ன செய்வது என்று தெரியாமல் திரிஷாவின் அம்மாவிடம் பேசியுள்ளார். திரிஷா அம்மா, திரிஷா ரொம்ப சென்சிடிவ் நான் பேசுகிறேன் என கூறியுள்ளார். அதன் பிறகு வந்த திரிஷா அந்த காட்சியை அற்புதமாக நடித்து முடித்தார் என கலா மாஸ்டர் கூறியுள்ளார்.