வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

தளபதி வீட்டுக்கு பக்கத்திலேயே வீடு வாங்கிய திரிஷா.. எத்தனை கோடி தெரியுமா?

நடிகை திரிஷா கிட்டதட்ட 20 வருடங்கள் தாண்டியும் சினிமாவில் ஹீரோயினாகவே நடித்து வருகிறார். ஆரம்பத்தில் தமிழ் சினிமா உள்ள டாப் நடிகர்கள் அனைவரோடும் ஜோடி போட்டு நடித்தார் திரிஷா. அதுமட்டுமின்றி நம்பர் ஒன் நடிகை என்ற பெயரையும் வாங்கி இருந்தார்.

ஆனால் அதன் பிறகு த்ரிஷாவின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் குறைய தொடங்கியதால் மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் திரிஷா நடித்திருந்தார்.

Also Read : கல்யாணம், புருஷன் என வெறுக்கும் 5 நடிகைகள்.. அரை கிளவியானாலும் மவுசு குறையாத திரிஷா

இப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் விட்ட மார்க்கெட்டை திரிஷா மீண்டும் பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி இப்போது தளபதி வீட்டுக்கு அருகில் திரிஷா புதிய வீடு ஒன்று வாங்கி உள்ளாராம். ஒரு காலகட்டத்தில் திரிஷா, விஜய் கூட்டணியில் வெளியான படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த வந்தது.

அதாவது கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி ஆகிய படங்களில் விஜய், திரிஷா இருவரும் ஜோடி போட்டு நடித்து இருந்தனர். இப்போது தளபதி விஜய்யின் நீலாங்கரை வீட்டிற்கு அருகிலேயே திரிஷா புதியதாக வீடு வாங்கியுள்ளதால் ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த வீட்டின் விலை சுமார் 35 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

Also Read : விக்னேஷ் சிவனுடன் இணைய மறுத்த திரிஷா.. அஜித்தின் AK62 படத்திற்கு வந்த சோதனை

மேலும் விஜய் வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கிறார். இந்த படத்திலும் விஜய்க்கு ஜோடியாக திரிஷா தான் நடிக்க இருக்கிறார். இதனால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தமிழ் சினிமாவில் கிடைத்து வருவதால் இங்கேயே திரிஷா செட்டிலாக இருக்கிறாராம்.

அதனால் தான் புதிய வீடு வாங்கியுள்ளார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும் இதற்கு முன்னதாக அஜித்தின் வீட்டுக்கு அருகாமையில் திரிஷா ஒரு ஃபிளாக் வாங்கி இருந்தார். இவ்வாறு தனது மார்க்கெட் உள்ள போதே சொத்துக்களை த்ரிஷா வாங்கி குவித்து வருகிறார்.

Also Read : ஹாலிவுட் படத்தை அட்டை காப்பியடித்த திரிஷாவின் ராங்கி.. தளபதி 67 பட நடிகைக்கு வந்த சோதனை

Trending News