Varalakshmi: வரலட்சுமி, நிக்கோலாய் இருவரின் திருமணம் இன்று தாய்லாந்தில் நடைபெறுகிறது. இதற்காக மிகப் பிரம்மாண்டமான ஏற்பாடுகளை சரத்குமார் செய்துள்ளார்.
இதற்கு முன்பே பிரதமர் உட்பட பல பிரபலங்களை சந்தித்து மகளின் திருமண அழைப்பிதழை அவர் கொடுத்தார். அந்த புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வைரலானது.
அதை அடுத்து சில தினங்களுக்கு முன்பே இவர்களின் திருமண கொண்டாட்டம் ஆரம்பித்துவிட்டது. அதன்படி மெஹந்தி பங்க்ஷன், சங்கீத் என ஒவ்வொன்றும் சிறப்பாக நடைபெற்றது.
திருமண பார்ட்டியில் திரிஷா
அதன்படி நேற்று நடந்த திருமண பார்ட்டியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில் முக்கியமானது திரிஷாவின் வருகை தான். வருஷங்கள் ஆனாலும் அதே அழகுடன் இருக்கும் இவர் பார்ட்டியில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகிறது.
அதில் ராதிகா, கோட் பட தயாரிப்பாளர் அர்ச்சனா என அனைவருடனும் திரிஷா கட்டி அணைத்தபடி போட்டோ எடுத்துள்ளார். ஏற்கனவே கோட் படத்தில் இவர் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்படத்தின் தயாரிப்பாளருடன் திரிஷா நெருக்கமாக இருப்பது அதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் சாந்தனு மனைவி கீர்த்தி, வித்யுலேகா ராமன் ஆகியோர் திரிஷாவுடன் எடுத்துக் கொண்ட போட்டோவும் ட்ரெண்டிங்கில் உள்ளது.
கோலாகலமாக நடைபெறும் வரலட்சுமியின் திருமணம்
- எம்ஜஆருக்கு ஒரு ஜெயலலிதா விஜய்க்கு.?
- த்ரிஷாவை கழட்டிவிட்ட RJ பாலாஜி
- எதிர்க்கட்சித் தலைவருக்கு TVK தளபதி போட்ட ட்வீட்