செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

யுனிவர்சல் கூட்டணிக்காக அஜித்தை டீலில் விட்ட த்ரிஷா.. இயக்குனர் மேல் இருக்கும் அவநம்பிக்கை

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் குந்தவையாக ரீ என்ட்ரி கொடுத்த த்ரிஷாவுக்கு தற்போது அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க இருக்கிறார். அதிலும் அந்த பட பூஜையில் கலந்து கொண்ட பலரும் த்ரிஷாவை பற்றி தான் புகழ்ந்து பேசினார்கள்.

அந்த அளவுக்கு அவர் 20 வருடங்கள் ஆன பிறகும் கூட அதே அழகுடன் இருக்கிறார். அதனாலேயே விஜய்யுடன் அவர் மீண்டும் ஜோடி சேர்வது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேபோன்று விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்திலும் இவர்தான் கதாநாயகியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

Also read: அஜித்தை பொருட்டாகவே மதிக்காத விஜய்யின் பேச்சு.. அமைதியாக கொடுக்கும் பதிலடி இதுதான்!

துரதஷ்டவசமாக இந்த இரண்டு படங்களின் சூட்டிங்கும் ஜனவரி மாதம் தான் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. அதனால் திரிஷா இந்த இரு படங்களில் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது என்ற மிகப்பெரும் குழப்பத்தில் இருக்கிறாராம். ஆனால் அவர் லோகேஷ் கனகராஜின் திரைப்படத்தை இழக்க விரும்பவில்லை.

ஏனென்றால் இப்போது கோலிவுட் சினிமாவில் அதிகம் கவனிக்கப்படும் ஒரே இயக்குனர் லோகேஷ் மட்டும் தான். அவருடைய ஒவ்வொரு அசைவும் ரசிகர்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் விஜய்யின் வாரிசு திரைப்படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை காட்டிலும் தளபதி 67 பற்றிய அப்டேட்டை தான் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Also read: பெரும் புள்ளிகளை ஓரங்கட்டி விழாவை தெறிக்கவிட்ட விஜய்.. ஆடியோ பங்ஷனை பார்த்து மிரண்ட துணிவு

அதன் காரணமாகவே திரிஷா இந்த யுனிவர்சல் கூட்டணியை மிஸ் பண்ண விரும்பவில்லை. அந்த வகையில் திரிஷா ஏதாவது ஒரு திரைப்படத்திலிருந்து விலகி விடுவார் என்று கூறப்படுகிறது. அதிலும் அஜித் படத்தை டீலில் விட்டுவிட்டு விஜய் படத்திற்கு ஓகே சொல்வதற்கு தான் அதிக வாய்ப்பு இருக்கிறதாம். ஏனென்றால் அவருக்கு விக்னேஷ் சிவன் மீது பெரிய அளவில் நம்பிக்கை இல்லை.

கடைசியாக அவர் இயக்கியிருந்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் அவருடைய படத்தில் புதுமையான விஷயங்கள் எதுவுமே இருக்காது என்று யோசித்த திரிஷா இப்போது விஜய் படத்தில் நடிக்கும் முடிவில் உறுதியாக இருக்கிறாராம். அந்த வகையில் இந்த இரு படங்களை பற்றிய புது அப்டேட் பொங்கலுக்கு வெளிவர இருக்கிறது.

Also read: வாரிசுக்கு முன்பே வெளியாகும் துணிவு டிரெய்லர்.. திட்டம் போட்டு காய் நகர்த்தும் தயாரிப்பாளர்

Trending News