ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

68 வயது நடிகருடன் ஜோடி சேரும் த்ரிஷா.. வாய்ப்பு கிடைச்சா போதும் அதுக்குனு இப்படியா அம்மணி.?

Trisha: தமிழ் சினிமாவின் 20 வருடங்களுக்கும் மேலாக கதாநாயகியாக நிலைத்து நிற்கிறார் திரிஷா. இடையில் கிட்டத்தட்ட ஒரு ஐந்து வருடங்களுக்கு மேல் த்ரிஷாவின் இடம் மொத்தமாய் சரிந்து விட்டது. இனி த்ரிஷா அவ்வளவுதான், அவருடைய கேரியர் முடிந்து விட்டது என்று பேச ஆரம்பித்து விட்டார்கள். நயன்தாராவின் வரவு தான் இதற்கெல்லாம் காரணம் என த்ரிஷா பொங்கி போய் உட்கார்ந்து இருந்தார்.

ஒரு நடிகை ஒரு முறை மார்க்கெட்டை இழந்துவிட்டால் மறுபடியும் பிடிப்பது என்பது நடக்காத விஷயம். ஆனால் திரிஷாவுக்கு அந்த அதிசயம் நடந்தது. பொன்னியின் செல்வன் படத்தில் மணிரத்தினம் குந்தவை கேரக்டரில் திரிஷாவை நடிக்க வைத்திருந்தார். அதன் பின்னர் நடிகை திரிஷாவுக்கு சினிமாவில் மார்க்கெட் உச்சாணி கொம்புக்கு சென்று விட்டது. கிட்டத்தட்ட நயன்தாராவின் இடத்தையே பிடித்து விட்டார்.

மீண்டும் மார்க்கெட்டை பிடித்த திரிஷா

இப்போது த்ரிஷாவின் சம்பளம் எட்டிலிருந்து பத்து கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. விஜய், அஜித் என அடுத்தடுத்து டாப் ஹீரோக்களுடன் இணைந்து விட்டார். சரி இப்படியே தன்னுடைய ஸ்டேட்டஸை நம்பர் ஒன் இடத்தில் வைத்துக் கொள்வார் என்று பார்த்தால், அடுத்தடுத்து திரிஷா எடுக்கும் முடிவுகள் எல்லாம் மீண்டும் அவரை அதல பாதாளத்திற்கு கொண்டு சென்று விடும் போல இருக்கிறது.

Also Read:இனி லேடி சூப்பர் ஸ்டார்னு கூப்பிடாதீங்க.. மொத்த கெத்தும் போய் வெத்தான நயன்தாரா

ஏற்கனவே த்ரிஷா நடித்த தி ரோடு படம் அவருக்கு காலை வாரிவிட்டது. இனி அஜித்துடன் அவர் இணைந்து நடிக்கும் விடாமுயற்சி படம் தான் மீண்டும் அவரை தூக்கி விட வேண்டும். வாய்ப்பு வரும் பொழுது மொத்தமாக சம்பாதித்து விட வேண்டும் என்று முடிவெடுத்து திரிஷா அடுத்த நடிகர் சிரஞ்சீவியின் படத்தில் நடிக்க இருக்கிறார். ஓஹோ என்று வந்து கொண்டிருக்கும் சமயத்தில் இப்படி 68 வயதில் நடிகருடன் அவர் ஜோடி சேர்வது பெரிய நெகட்டிவாக பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே போலோ சங்கர் படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்த தமன்னா மற்றும் கீர்த்தி சுரேஷை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து விட்டார்கள். தற்போது அந்த லிஸ்டில் சேர இருக்கிறார் த்ரிஷா. வாய்ப்பு வருகிறது என்பதற்காக இப்படி எல்லாமா முடிவெடுப்பது என இப்போதே த்ரிஷாவை இணையவாசிகள் கேலி செய்து வருகிறார்கள்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் 157 வது படத்தில் திரிஷா ஜோடி சேர இருக்கிறார். இந்த படம் பேண்டஸி திரைப்படம் ஆக வெளியாக இருக்கிறது. அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வரும் சிரஞ்சீவிக்கு இந்த படம் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெகா 157 என தற்போதைக்கு பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை இயக்குனர் மல்லிகை வசிஷ்டா இயக்குகிறார்.

Also Read:ஹரிஷ் கல்யாணத்துக்கு கை கொடுத்த புது ராசி.. நயன்தாராவையே ஓரங்கட்டிய செகண்ட் இன்னிங்ஸ்

Trending News