வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

திடீரென அஜித் பட ஷூட்டிங்கில் இருந்து வேகமாக கிளம்பிய திரிஷா.. என்னவா இருக்கும்?

நடிகை திரிஷா பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2 படங்கள் மூலம் மிகச் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளார். இந்த படங்களில் குந்தவை என்ற கேரக்டரில் தன்னுடைய ஆளுமையை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தார். இந்த படங்களை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் மட்ட பாட்டுக்கு போட்ட ஆட்டத்திலிருந்து இன்னும் ரசிகர்கள் மீண்டு வரவில்லை. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் த்ரிஷா. விடாமுயற்சி படத்தை தொடர்ந்து, குட் பேட் அக்லீ படத்திலும் நடித்து வருகிறார் த்ரிஷா. குறிப்பாக குட் பேட் அக்லீ படத்தில் த்ரிஷா தான் வேண்டும் என்றுஅடம் பிடித்திருக்கிறார் அஜித்.

திடீரென கிளம்பிய திரிஷா

இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டில் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், திடீரென நடிகை த்ரிஷா படப்பிடிப்பில் இருந்து கிளம்பி சென்னைக்கு வந்துள்ளாராம். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஆளுக்கு ஒன்னு பேச ஆரம்பித்து விட்டனர். எதோ சண்டை காரணமாக தான் கிளம்பியிருப்பார் என்ற பேச்செல்லாம் அடிபட்டது.

இந்த நிலையில் இது தொடர்பாக விசாரித்தபோது தான் உண்மை தெரிய வந்துள்ளது. நகைக்கடை விளம்பரத்தில் நடிப்பதற்காக குட் பேட் அக்லி படப்பிடிப்பில் இருந்து கிளம்பி சென்னைக்கு வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

விரைவில் அவர் குட் பேட் அக்லி படப்பிடிப்பில் இணைந்துவிடுவார் என தகவல் தெரிவிக்கின்றனர். இதை தொடர்ந்து ரசிகர்கள், அப்டேட் கேட்பதோடு, த்ரிஷாவின் ஒரு மாத வருவாய் எவ்வளவு என்றும் கேட்க ஆரம்பித்துவிட்டனர்.

Trending News