சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

இனி ஒருத்தருக்கும் இந்த தைரியம் வரக்கூடாது.. ஒட்டுமொத்தமாக செக் வைத்து திரிஷா அனுப்பிய நோட்டீஸ்

Trisha Send The Notice: கடந்த சில தினங்களாகவே த்ரிஷா பற்றிய விவகாரம் தான் சமூக வலைத்தளங்களில் பெரும் எதிரொலியாக இருக்கிறது. அரசியல் பிரமுகர் ஒருவர் ஆதாரம் இல்லாமல் பேசிய அவதூறுக்கு த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

அது மட்டும் இன்றி இதை சட்ட ரீதியாக எதிர்கொள்ளப் போவதாகவும் தெரிவித்திருந்தார். உடனே பயந்து போன அந்த அரசியல் பிரபலம் தன்னுடைய மன்னிப்பை பகிரங்கமாக கேட்டிருந்தார். ஆனாலும் இந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் விடக்கூடாது என நெட்டிசன்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில் திரிஷா இந்த விவகாரத்தில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருப்பது பாராட்டுதலை பெற்று வருகிறது. ஆதாரம் இல்லாமல் நடிகைகளை பற்றி இந்த மாதிரி பேசுபவர்களுக்கு இப்படித்தான் பதிலடி கொடுக்க வேண்டும். சிங்க பெண் திரிஷா, குட்டி ஜெயலலிதா என ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Also read: ரோடு படத்தில் தெரியவந்த திரிஷாவின் உண்மை கேரக்டர்.. லோக்கல் கவுன்சிலரை அலறவிட்ட குந்தவை

அந்த நோட்டீஸில் இந்தப் பிரச்சனையால் த்ரிஷாவுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் பற்றி குறிப்பிட்டு இருக்கும் வழக்கறிஞர் சன் நியூஸ், என்டிடிவி போன்ற முன்னணி செய்தி தொடர்பு சேனல்கள், யூட்யூப் சேனல்கள் என அனைத்திலும் இந்த செய்தி வெளியாகி இருக்கிறது.

trisha-notice
trisha-notice

இப்படி ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுக்கு அவர்கள் நிச்சயம் பதில் அளிக்க வேண்டும். அந்த வகையில் 24 மணி நேரத்தில் நிபந்தனை அற்ற மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட வேண்டும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

notice-trisha
notice-trisha

இதன் மூலம் த்ரிஷா ஃபுல் ஃபார்மில் இறங்கி இருக்கிறார். மன்னிப்பு கேட்டால் மட்டும் போதுமா? இனி யாருக்கும் பெண்களைப் பற்றி அவதூறாக பேசும் தைரியம் வரக்கூடாது என ஒட்டுமொத்தமாக செக் வைத்திருக்கிறார். நிச்சயம் இது பாராட்டப்பட வேண்டிய ஒரு விஷயம் தான்.

Also read: திரிஷாக்காக வரிந்து கட்டி வந்த சங்கம்.. உதயநிதிக்கு ஆதரவாகி விடுமோ? அச்சத்தில் வாய்மூடிய நடிகர்கள்

Trending News