வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

புது மாப்பிள்ளைக்கு திரிஷா போட்ட கண்டிஷன்.. மறைமுகமாக சமந்தாவை குத்தி கிளிச்சுட்டாங்க!

இவருக்கு 38 வயது ஆகிறதா என்று அனைவரும் வாயை பிளக்கும் அளவிற்கு திரிஷா கனவுக்கன்னியாக திகழ்ந்து வருகிறார். இன்னும் கல்யாணம் ஆகாமல் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் நடித்த பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில், அனைவரையும் ஜொள்ளு விடுமளவிற்கு செய்துள்ளார்.

பார்ப்பவர்கள் பொறாமைப்படும் அழகு. இன்னும் சின்ன பொண்ணு மாதிரி இருக்கும் உடல் அமைப்பு கொண்டுள்ளதால் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார். இப்பொழுது அவருக்கு திருமண ஆசை வந்துள்ளது.

Also Read : ஷங்கர் படத்தில் நடிக்க முடியாமல் போன திரிஷா.. பல வருடமாக போராட்டம்

திரிஷா திருமணத்திற்காக சில கண்டிஷன்கள் போட்டுள்ளார். அவர் திருமணத்தைப் பற்றி மனதில் சில கொள்கைகளும் வைத்துள்ளார். இவரைப்போலவே பல ஹீரோக்களும், ஹீரோயின்களும் இன்னும் திருமணம் ஆகாமல் சுற்றி வருகின்றனர்.

சமீபத்தில் திரிஷா திருமணத்தைப் பற்றி ஒரு செய்தியை பகிர்ந்துள்ளார், அதில் வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழக்கூடிய நபர் இவர்தான் என்று, என் மனதில் தோன்ற வேண்டும். அப்படி ஒருவரை சந்தித்தால் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என்று தெளிவாகக் கூறியுள்ளார்.

Also Read : குந்தவை கொடுக்கும் ஓவர் அலப்பறை.. பொன்னியின் செல்வன் படத்தால் சம்பளத்தை உயர்த்திய திரிஷா

அதுமட்டுமின்றி திருமணத்திற்குப் பின் விவாகரத்து செய்து கொள்வதில் எல்லாம் அவருக்கு விருப்பம் இல்லையாம். திருமணத்திற்கு பின் ஒரு அழகான வாழ்க்கை இருக்கிறது குடும்பம், இல்லற வாழ்வு, குழந்தைகள் என அந்த வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க வேண்டுமாம்.

இவர் இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது மறைமுகமாக விவாகரத்து பெற்று சந்தோஷமாக வாழ்ந்து வரும் சமந்தாவை தான் கூறுகிறார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. சமந்தா மற்றும் நாகசைதன்யா அவசர அவசரமாய் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பெரிய இடத்திற்கு மருமகளாக சென்று படாதபாடுபட்டு ஓய்ந்து விட்டார் சமந்தா. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இப்பொழுது விவாகரத்தும் பெற்றுவிட்டார். இதேபோல் தனுஷ், ஐஸ்வர்யா திருமணமும் முடிவுக்கு வந்து இழுபறியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read : மூன்றே நாளில் 100 கோடி கல்லா கட்ட போகும் நயன்தாரா.. கல்யாணத்துக்கு பின்னும் விட்டுக்கொடுக்காத No.1 லேடி

Trending News